விழுப்புரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் பண்ருட்டி தி.வேல்முருகன் சிறப்புரையாற்றினார்
சனி, 26 ஜனவரி, 2013
விழுப்புரம்:
விழுப்புரத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழா
25/01/2013 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் துணைப் பொதுச்செயலாளர்
ஆர்.ரவி அலெக்ஸ் தலைமை வகித்தார். விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர்கள்
கிழக்கு ஆர். குமரன், மேற்கு ரா.சசிக்குமார் முன்னிலை வகித்தனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:
ஈழத் தமிழர்களிடத்தில் அரசியல் தீர்வு குறித்து ஐக்கிய
நாடுகள் சபையின் மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். குறைந்தபட்சம் அதற்காகவாவது நாம் போராட
வேண்டும். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. காவிரி
நதிநீர் விவகாரம், முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சனைகளில் சாதி, மத
எல்லைகளைக் கடந்து தமிழர்களாய் ஓரணியில் திரள்வோம்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக