2015ஆம் ஆண்டு தமிழர் வாழ்வு உரிமைகள் மீட்கப்பட்டு ஏற்றமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக திகழ வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து செய்தி
புதன், 31 டிசம்பர், 2014
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தமிழர் வாழ்வுரிமைகளை வென்றிட உறுதியேற்போம்!
2014ஆம் ஆண்டு நிறைவடைந்து 2015ஆம் ஆண்டு உதயமாகிறது. இந்த புதிய ஆண்டில்
அனைத்து தமிழ் மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த அன்பு நல்வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்
தமிழர் இனம் ஆண்டாண்டு காலமாக தம்முடைய உரிமைக்காக தொடர்ந்து போராடிக்
கொண்டிருக்கிறது. தமிழினம் இன்னமும் தமக்கு உரித்தான வாழ்வுரிமையையும்
சுதந்திரத்தையும் முற்று முழுதாக மீட்டெடுத்து நிம்மதிப் பெருமூச்சு
விட்டுவிடவில்லை.
உதயமாகும் 2015ஆம் ஆண்டிலும் நமக்கான போராட்டங்களும் போர்க்களங்களும் காத்துக் கிடக்கின்றன.. இந்த புதிய ஆண்டில் தமிழினம் எதிர்கொண்டிருக்கும் அனைத்து வாழ்வுரிமைப் பிரச்சனைகளிலும் முழுமையாக வெற்றி காண அயராது போராடுவோம் என்பதையே இந்த புத்தாண்டு நாள் உறுதிமொழியாகக் கொள்வோம்.
தமிழகத்தின் உரிமை சார்ந்த அனைத்துப் போராட்டங்களிலும் ஜாதி, மத, கட்சி மாச்சரிய எல்லைகளைக் கடந்து ஓரணியில் தமிழராய் அணிதிரள்வோம் எனவும் உறுதி கொள்வோம்.
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையில் இருந்து ஈழத் தமிழர்கள் முழுமையாக விடுதலை பெறுவதற்கான அரசியல் நகர்வுகளை சர்வதேச அரங்கில் முனைப்புடன் தொடர்வோம் என்றும் இந்த புதிய ஆண்டில் உறுதி ஏற்போம்.
தமிழர் வாழ்வு உரிமைகள் மீட்கப்பட்டு ஏற்றமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக திகழ வேண்டும் என இந்தப் புதிய ஆண்டில் என் அன்புநல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி