அரசு பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்றப்படுவதை கண்டித்து பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
திங்கள், 17 ஜூன், 2013
தமிழக
அரசு வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து தமிழ் வழிக் கல்வி பள்ளிகளிலும்
ஆங்கில வழிக் கல்வியை புகுத்தி உள்ளது. தமிழ் நாட்டில் அரசு பள்ளிகளில்
மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் வழிக் கல்விக்கு தமிழக அரசு இந்த
ஆண்டு முதல் மூடு விழா காண்கிறது . தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார்
மற்றும் அரசுப் பள்ளிகளிலும் தமிழ்வழிக் கல்வியை கட்டாய பாடமாக கொண்டு வர
வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலையில் 80
% இட ஒதுக்கீடு தரக் கோரியும் இன்றி தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம்
சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்து கொண்ட
கண்டன ஆர்பாட்டம் 17/06/2013 அன்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு தமிழக
வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைமை தாங்கினார். மேலும் தமிழ் வழிக் கல்வியை ஆதரித்து ,மதிமுக, தமுமுக,
தந்தை பெரியார், திராவிடக் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தமிழ் தேசிய
பொதுவுடைமை கட்சி, தமிழ் தேச விடுதலை இயக்கம், சேவ் தமிழ் இயக்கம் , மே 17
இயக்கம், உலக தமிழ் சங்கம், தமிழர் எழுச்சி இயக்கம், தமிழ்நாடு மக்கள்
கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் கட்சிகள் பங்கேற்றன. பண்ருட்டி
தி.வேல்முருகன்,தோழர் தியாகு, மல்லை சத்தியா, விடுதலை ராஜேந்திரன்,
திருமுருகன் காந்தி, சேவ் தமிழ் செந்தில் , குணங்குடி அனிபா, ஆனூர்
செகதீசன், அருண்ஷோரி, அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வியே முதன்மை பாடமாகவும் பயிற்று
மொழியாகவும் இருத்தல் வேண்டும் , ஆங்கிலம் , ருசியா, சீனம் பிரெஞ்சு போன்ற
மொழிகள் இரண்டாம் பாடாமாக இருக்கலாம் இதன் மூலம் உலக அளவில் உள்ள அறிவுச்
செல்வங்களை தமிழ் மொழிக்கு , தமிழ் நாட்டிற்கு கொண்டு வரலாம் . தமிழில்
சிந்திக்கும் ஆற்றல், படைப்புத் திறன் என்பது தமிழ் மொழி வழியில் படித்தால்
மட்டுமே தமிழர்களுக்கு வரும், தமிழர்கள் சிறக்க தமிழ் வழிக் கல்வி அவசியம்
என்ற கருத்தை தோழர் தியாகு அவர்கள் சிறப்பாக முன்மொழிந்தார். தமிழ்வழிக்
கல்வியின் அவசியத்தை பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் முன்வைத்தனர். அடுத்த
தலைமுறை சிறந்த பண்பாடுகள் கொண்ட அறிவியல் சமூகமாக மாற அனைத்து
பாடங்களையும் தமிழில் தமிழ்நாட்டு குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற
கோரிக்கையும் முன்வைக்கப் பட்டது . அரசு உடனே தனது ஆங்கில வழிக் கல்வி
திட்டத்தை கைவிட்டு தமிழ் வழிக் கல்வியை அனைத்து பள்ளிகளிலும் ஊக்குவிக்க
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக