என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்பதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிர்ப்பு - தி.வேல்முருகன் தலைமையில் முற்றுகை போராட்டம் அறிவிப்பு
திங்கள், 24 ஜூன், 2013
என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்பதற்கு
தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிர்ப்பு - தி.வேல்முருகன் தலைமையில் முற்றுகை
போராட்டம் அறிவிப்பு
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பொதுத்துறை நிறுவனம் என்பது பொதுமக்களின் வாழ்வை வளப்படுத்த உருவாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் அதிக லாபம் ஈட்டும் என்.எல்.சி.யின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்வது பொதுமக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
என்.எல்.சி. நிறுவனம் நெய்வேலியை சுற்றியுள்ள பகுதியின் பூர்வீக மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து நூற்றுக்கணக்கான கிராமங்கள், ஏரிகள், நீர் நிலைகள், விவசாய கிராமங்களை அழித்து உருவாக்கப்பட்டதாகும். நிலம் கொடுத்த மக்களின் அடிப்படை உரிமைகள் இன்றும் நிவர்த்தி செய்யப்படவில்லை.
நவரத்னா விருது பெற உழைத்த ஒப்பந்த தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகி விட்டது. வெளிமாநிலங்களுக்கு என்.எல்.சி. மின்சாரத்தை வழங்கும் மத்திய அரசு நெய்வேலியை சுற்றியுள்ள ஊராட்சிகளுக்கு மின்சாரம் தர மறுக்கிறது.
என்.எல்.சி.யில் வெட்டி எடுக்கும் நிலக்கரியை ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சுரங்கம் 1-ஏ பகுதியில் மேல் மண் நீக்கும் வேலையை கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வழங்கியுள்ள பக்கெட் வீல் கொண்டு மண்ணை நீக்காமல் தனியாரிடம் காண்டிராக்ட் கொடுத்து மண்ணை நீக்கம் செய்வது முதல் என்.எல்.சி. அதிகாரிகள் செல்லும் வாகனங்கள், மருத்துவ வசதிகள் எல்லாம் தனியார் மயம் ஆகிவிட்டது.
என்.எல்.சி. பிரிண்டிங் பிரசை இழுத்து மூடிவிட்டு அதையும் தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. அதிகாரிகள் திட்டமிட்டு தனியாருக்கு தாரைவார்க்கும் செயல்களை படிப்படியாக செய்துவருகின்றனர். அதில் அடுத்த கட்டமாக சிபியின் ஆணைப்படி 5 சதவீத பங்குகளை தனியாரிடம் விற்கும் போக்கை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.
தமிழக அரசின் சார்பில் முதலமைச்சரும் மற்றும் அனைத்து கட்சிகளும், கடுமையாக எதிர்த்தும் 5 சதவீத பங்குகளை விற்றே தீருவோம் என்று மத்திய அரசு பிடிவாதமாக இருந்தால் அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி எனது தலைமையில் என்.எல்.சி.யை தொடர்ந்து முற்றுகையிட்டு தனியார் மயமாக்குவதை தடுப்போம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக