மத்திய அரசின் தொடர் தமிழின விரோதப் போக்கினைக் கண்டித்து சீர்காழியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம்
ஞாயிறு, 30 ஜூன், 2013
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக மத்திய அரசின் தொடர் தமிழின விரோதப்
போக்கினைக் கண்டித்து சீர்காழியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டப்
பொதுக்கூட்டம் சனிக்கிழமை (29/06/2013) அன்று நடைபெற்றது.
தொடரும் மத்திய அரசின் தமிழின
விரோதப் போக்குகளான ஈழத் தமிழ்மக்களைக் கொல்லத் துணை போனது மட்டுமல்லாமல்
தொடர்ந்து சிங்கள இராணுவத்துக்கு பயிற்சி அளிப்பது, மீனவர்கள்
தாக்கப்படுவது, காவிரியில் தண்ணீர் தர மறுப்பது, மத்திய தொகுப்பில் இருந்து
மின்சாரம் தர மறுப்பது போன்றவற்றைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும்,
பொதுக்கூட்டமும் இடம்பெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.
வேல்முருகன் அவர்கள் எழுச்சி உரை ஆற்றினார்.