பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்ற ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம் - புகைப்படங்கள்
வியாழன், 17 மே, 2012
தமிழ் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐ.நா வை வலியுறுத்தி நேற்று 16/05/2012 சென்னை மெரீனா கடற்கரையில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் தமிழகத்தில் தனித் தமிழ் ஈழத்திற்கு ஆதரவு உள்ளது என்பதை காட்டும் விதமாக ஒரு கோடி கையெழுத்துக்கள் பெற்று ஐ நா விற்கு அனுப்புவது தான். இந்த தொடக்க நிகழ்வில் , தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன், அய்யா பழ நெடுமாறன், தோழர் நல்லகண்ணு, திரு வைகோ,, வன்னி அரசு, ஜவஹருல்லா , தென்னரசு போன்ற தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கையெழுத்தை பதிவு செய்தனர். அணைத்து தமிழ் உணர்வாளர்களும் , தமிழின தலைவர்களும் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக