பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் கடலூர் முதுநகரில் ரயில் மறியல் போராட்டம்

ஞாயிறு, 18 மார்ச், 2012

கடலூர்:

        கடலூர் முதுநகர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்றுச் செல்ல வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கடலூர் முதுநகர் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், முதுநகர் வர்த்தக சங்கத்தினர், மனித் உரிமைப் பாதுகாப்பு மையத்தினர், தமிழ்நாடு மீனவர் பேரவை மற்றும் பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ரயில் மறியல் போராட்டம் செய்தனர்.

         
கடலூர் முதுநகரில் சனிக்கிழமை நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் முன்னாள் பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் தி. வேல்முருகன் தலைமயில் ரயில் மறியல் போராட்டம்  நடைபெற்றது. 


        போராட்டத்தில் தி. வேல்முருகன் உள்ளிட்ட 1000  -க்கும் மேற்பட்டோர்  பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 55 பேர் பெண்கள். ரயில்மறியல் போராட்டத்தை முன்னிட்டு கடலூர் முதுநகரில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், முதுநகர் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், முதுநகர் வர்த்தக சங்கத்தினர், மனித் உரிமைப் பாதுகாப்பு மையத்தினர், தமிழ்நாடு மீனவர் பேரவை மற்றும் பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


       முதுநகர் ரயில் நிலையத்துக்கு பகல் 1-50 மணிக்கு வந்த ராமேசுவரம் செல்லும் புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் 15 நிமிடங்கள் மறியலில் ஈடுபட்டனர்.


     தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி மற்றும் முதுநகர் ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் பால்ராஜ், இணைச் செயலர் ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகவேந்தன், மனித உரிமைப் பாதுகாப்பு மைய மாவட்டச் செயலர் செந்தில், நுகர்வேர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த கடல் தனசேகரன், தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் சுப்புராயன், மக்கள் பாதுகாப்புக் கழக மாவட்டத் தலைவர் சுமதி உள்ளிட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP