தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட மாநாடு

சனி, 31 மார்ச், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட மாநாடு வரும் மே மாதம் 18ம்  தேதி கடலூரில் நடை பெற உள்ளது . இதற்காக பிரம்மாண்டமான பதாகைகள் மற்றும் சுவர் ஓவியங்கள் எழுதப்பட்டு வருகிறது. 










Read more...

பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் கடலூர் முதுநகரில் ரயில் மறியல் போராட்டம் - புகைப்படங்கள்

ஞாயிறு, 18 மார்ச், 2012

பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் 17/03/2012 அன்று  கடலூர் முதுநகரில் ரயில் மறியல் போராட்டம் - புகைப்படங்கள்











Read more...

பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் கடலூர் முதுநகரில் ரயில் மறியல் போராட்டம்

கடலூர்:

        கடலூர் முதுநகர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்றுச் செல்ல வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கடலூர் முதுநகர் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், முதுநகர் வர்த்தக சங்கத்தினர், மனித் உரிமைப் பாதுகாப்பு மையத்தினர், தமிழ்நாடு மீனவர் பேரவை மற்றும் பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ரயில் மறியல் போராட்டம் செய்தனர்.

         
கடலூர் முதுநகரில் சனிக்கிழமை நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் முன்னாள் பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் தி. வேல்முருகன் தலைமயில் ரயில் மறியல் போராட்டம்  நடைபெற்றது. 


        போராட்டத்தில் தி. வேல்முருகன் உள்ளிட்ட 1000  -க்கும் மேற்பட்டோர்  பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 55 பேர் பெண்கள். ரயில்மறியல் போராட்டத்தை முன்னிட்டு கடலூர் முதுநகரில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், முதுநகர் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், முதுநகர் வர்த்தக சங்கத்தினர், மனித் உரிமைப் பாதுகாப்பு மையத்தினர், தமிழ்நாடு மீனவர் பேரவை மற்றும் பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


       முதுநகர் ரயில் நிலையத்துக்கு பகல் 1-50 மணிக்கு வந்த ராமேசுவரம் செல்லும் புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் 15 நிமிடங்கள் மறியலில் ஈடுபட்டனர்.


     தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி மற்றும் முதுநகர் ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் பால்ராஜ், இணைச் செயலர் ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகவேந்தன், மனித உரிமைப் பாதுகாப்பு மைய மாவட்டச் செயலர் செந்தில், நுகர்வேர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த கடல் தனசேகரன், தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் சுப்புராயன், மக்கள் பாதுகாப்புக் கழக மாவட்டத் தலைவர் சுமதி உள்ளிட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Read more...

நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க கோரி - பரப்புரை பயணம்

செவ்வாய், 13 மார்ச், 2012

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தி மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க கோரி - பரப்புரை பயணம்  


Read more...

சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பொதுக்கூட்டம்: பண்ருட்டி தி.வேல்முருகன் சிறப்புரையாற்றினார்

செவ்வாய், 6 மார்ச், 2012

சேலம்:
         சேலம் போஸ் மைதானத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் 04/03/2012 ஞாயிற்றுகிழமை மாலை   நடந்தது. 

        கூட்டத்திற்கு மாநில துணை பொது செயலாளர் எஸ்.கே. சக்திவேலன் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் ஜெயமோகன் வரவேற்றார். முத்து, மா.கணேசன், பாலு, காட்டுரவி, எஸ்.ரவி, எஸ்.கே.ஆர்.அன்பரசன், ஏ.வடிவேல் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் சிறப்புரையாற்றினார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் ஆற்றிய சிறப்புரை: 

        தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்காகவும், சாதி, சமய, மத எல்லைகளுக்கு அப்பால் தமிழர்கள் அனைவரையும ஒன்று திரட்டி அவர்களின் உரிமைக்காக பாடுபடவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி. 

தமிழ் ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக தனி ஈழம் மலர வேண்டும் என்ற பிரபாகரனின் கனவு நிறைவேற வேண்டும் என்பதும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நோக்கமாகும். 

மனித நேயம் வளர்த்தல், 
மனித நேயம் காத்தல்,
 மனிதனை மனிதனாக மதித்தல், 
மன நலம் குன்றியவர்களுக்கு பாதுகாப்பு அளித்து உதவுதல், 
ஆதரவற்றோருக்கும்,
முதியோர்களுக்கும், 
ஏழை எளியோருக்கும், 
ஊனமுன்றோருக்கும் வாழ்வளித்தல், 
விவசாய நிலங்கள் மனை நிலங்களாக விற்கப்படுவதை தடுத்தல் 

உள்பட 26 கொள்கைகளை அடிப்படையாக கொண்டு இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. 
        தமிழக மக்களின் உரிமைகளை காக்க என்றென்றும் நாங்கள் துணை நிற்போம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கான கட்சியாகத்தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
       தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பேராசிரியர் தீரன், பொது செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான காவேரி, மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகம் ஆகியோரும் பேசினர். கூட்டத்தில் வீரப்பனின் மாமனார் ஜி.அய்யனாரும் பேசினார்.

        கூட்டத்தில் நிர்வாகிகள் மேட்டூர் ராமசுப்பன், கே.வி. சிவராமன், சத்யமூர்த்தி, சி.அழகேசன், ரவிஅலெக்ஸ், சண்முகசுந்தரம், விஜய் குமார், மலர் ராமலிங்கம், எஸ்.அய்யந்துரை, வி.நடராஜன், சிவக்குமார், ஆறுமுகம், நாகமணி, தலித் சக்திவேல், எம்.விஜயலிங்கம், சங்கர் கணேஷ், பாப்பாத்தி ராமமூர்த்தி, கண்ணன், முகமது யூசுப், பாலு, காஞ்சி குமார், பிரகாஷ், கோபிநாத், தவமணி, மனோகரன், தீனா, கணேசன், அன்பு, சரவணன், ராமச்சந்திரன், செந்தில்குமார், குமரேசன், சுப்பிரமணியம், பார்த்திபன், பாலன், சுரேஷ் உள்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஏ.பி.குமார் நன்றி கூறினார்.


Read more...

பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்

திங்கள், 5 மார்ச், 2012









        தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் 4-03-2012 மாலை, சேலம் போஸ் திடலில் நடந்த ஈழத்தின் குரல் மேதகு அண்டன் பாலசிங்கம் பிறந்த நாள் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்.



Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP