செங்கொடியின் இறுதி நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் தி.வேல்முருகன் அஞ்சலி - புகைப்படங்கள்

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

 நாள் :   05/09/2011

            தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்காக உயிர் நீத்த இளம் பெண் செங்கொடியின் உடல் தகனம்  அவரது சொந்த கிராமமான மங்கல்பாடியில் நடைபெற்றது . அவருக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
 
             காஞ்சிபுரத்தில்வசித்து வந்த இளம் பெண் செங்கொடி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கில் போடக் கூடாது என்று வலியுறுத்தி காஞ்சிபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்தார்.அவரது மரணம், அதுவும் தமிழகத்தில் முதல் முறையாக நடந்த ஒரு பெண்ணின் தீக்குளிப்புச் சம்பவம் தமிழக மக்களை உலுக்கி விட்டது. இந்த தீக்குளிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் அசாதாரணமான நிலை ஏற்பட்டது.

           உயிர் நீத்த செங்கொடிக்கு ஆயிரக்கணக்கான மக்கள்அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக காஞ்சிபுரம் மக்கள் பெருமளவில் திரண்டு வந்து தங்களுக்காக பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி வந்த செங்கொடிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பாட்டாளி மக்கள் கட்சியின்  இணைப் பொதுச்செயலாளர் தி.வேல்முருகன் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP