உள்ளாட்சித் தேர்தல்: கடலூர் மாவட்ட பா.ம.க.பணிக்குழு பட்டியல் : தி.வேல்முருகன் வெளியிட்டார்
திங்கள், 26 செப்டம்பர், 2011
கடலூர்:
கடலூர் மாவட்ட பா.ம.க., வில் உள்ளாட்சித் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என மாநில இணை பொதுச் செயலாளர் வேல்முருகன் கூறியுள்ளார்.
மாநில இணை பொதுச் செயலாளர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடலூர் மாவட்ட பா.ம.க., வில் உள்ளாட்சித் தேர்தல் பணிக் குழுக்கள் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலுடன், மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் கோவிந்தசாமி, மாநில துணை பொதுச் செயலர் சண்முகம் ஆகியோர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி
கடலூர், பண்ருட்டி:
கடலூர், பண்ருட்டிக்கு மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, அலுவலக செயலர் ராமச்சந்திரன், தலைவர் கோதண்டபாணியும்,
நெய்வேலி, குறிஞ்சிப்பாடி:
நெய்வேலி, குறிஞ்சிப்பாடிக்கு மாநில துணைத் தலைவர் திருமால்வளவன், மாவட்டச் செயலர் தர்மலிங்கம், நிர்வாகக்குழு உறுப்பினர் முத்து வைத்திலிங்கம், தலைவர் சக்திவேல், அமைப்புச் செயலர் ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி:
புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடிக்கு மாநில தேர்தல் பணிக்குழு தனபால், மாவட்டச் செயலர் சின்னதுரை, முன்னாள் மாநில துணை பொதுச் செயலர் திருஞானம், முன்னாள் மாவட்டச் செயலர் செல்வராசு, மாவட்டத் தலைவர் ஆடியபாதம், சிதம்பரம்,
காட்டுமன்னார்கோவில் :
காட்டுமன்னார்கோவிலுக்கு மாநில துணைத் தலைவர் சவுந்திரபாண்டியன், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு தேவதாஸ் படையாண்டவர், மாவட்டச் செயலர் வேணு புவனேஸ்வரன், முன்னாள் மாவட்டச் செயலர் கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.