மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்கிறேன்: நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் தி.வேல்முருகன்

திங்கள், 16 மே, 2011

          தேர்தலில் எங்களுக்கு ஓய்வு கொடுத்து மக்கள் எடுத்துள்ள முடிவை ஏற்பதாக நெய்வேலி தொகுதியில் குறைந்த ஓட்டில்  வெற்றி வாய்ப்பை  இழந்த  பாமக வேட்பாளர் தி.வேல்முருகன் நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை கூறினார். 
 
     2011 தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக  இளம் புயல் தி.வேல்முருகன் போட்டியிட்டார். இளம் புயல் தி.வேல்முருகனை எதிர்த்து அ.தி.மு.க.வேட்பாளராக  எம்.பி.எஸ். சிவ சுப்பிரமணியன் போட்டியிட்டார். மக்களிடம் நல் பெயரும், என்.எல்.சி. தொழிலாளர்களின் ஆதரவு இருந்போதிலும் இளம் புயல் தி.வேல்முருகனைவிட 8,118 வாக்குகள் அதிகம் பெற்று  அ.தி.மு.க.வேட்பாளர் எம்.பி.எஸ். சிவ சுப்பிரமணியன் வெற்றி பெற்றார். 
 
 நெய்வேலி நகர திமுக செயலர் புகழேந்தி வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியது தொட்ர்பாக, அவரை சந்தித்து ஆறுதல் கூறவந்த வேல்முருகன், அங்கு கூடியிருந்த திமுக மற்றும் பாமகவினரிடையே பேசுகையில், 
 
          "நீங்கள் எனக்கு ஆறுதல் கூறுவீர்கள் என நான் எதிர்பார்க்கும் வேளையில் நீங்களே சோகமாக இருப்பது எனக்கு கவலையளிக்கிறது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். தேர்தலில் எனக்காக திமுக, தொமுசவினர் நன்கு பணியாற்றியிருப்பது எனக்கு ஆறுதல் அளிக்கிறது. எதைப்பற்றியும் யாரும் கவலைப்பட வேண்டாம். எப்போதும்போல் எனது மக்கள் பணி தொடரும். உங்களில் யாருக்காவது, வேறு கட்சியினரால் பாதிப்பு ஏற்படுகிறது என்றால் அதை உடனடியாக எனக்குத் தெரிவியுங்கள். அடுத்த நிமிடம் உங்கள் பாதுகாப்புக்கு நான் வருவேன். உடல் நிலை காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி 6 மாதம் ஓய்வெடுக்கவுள்ளேன். எனவே கட்சிப் பிரமுகர்கள், கூட்டணிக் கட்சிப் பிரமுகர்களின் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. உடல்நிலை சீரானவுடன் நான் மீண்டும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வேன்' என்றார். 2011 தமிழக சட்ட மன்றத் தேர்தலில் நெய்வேலி சட்ட மன்றத் தொகுதியில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்கிறேன். என்.எல்.சி. தொழிலாளர்களின் உரிமைக்காக தொடந்து குரல் கொடுப்பேன்.
 
நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் 
 
Tamil Nadu - Neyveli
Result Declared
Candidate PartyVotes
M.P.S.SIVASUBRAMANIYANAll India Anna Dravida Munnetra Kazhagam69549
T.VELMURUGANPattali Makkal Katchi61431
M.KARPAGAMBharatiya Janata Party1406
S.PANDIANIndependent1273
P.LILYLok Satta Party1232
P.KUMARIndiya Jananayaka Katchi971
S.ELANGOVANLok Jan Shakti Party576
P.CHANDRASOCIALIST UNITY CENTRE OF INDIA (COMMUNIST)478
V.K.KUMARAGURUIndependent44

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP