தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் 5 அப்பாவி தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்த இலங்கை நீதிமன்றத் தீர்ப்பை கண்டிக்கும் விதமாக சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்றும் மாபெரும் முற்றுகைப் போராட்டம்! - ஆயிரக்கணக்கோர கைது
வெள்ளி, 31 அக்டோபர், 2014
எமர்சன்,
பிரசாந்த், வின்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகிய 5 அப்பாவி தமிழர்களுக்கு
தூக்கு தண்டனை விதித்த சிங்கள பேரினவாத அரசின் சென்னை தூதரகத்தை அகற்ற
முற்றுகையிட்ட தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் ஆயிரக்கணக்கானோர் கைது
செய்யப்பட்டனர்.
சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்தை பண்ருட்டி வேல்முருகன் தலைமையில், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி குடந்தை அரசன், தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தோழர் தியாகு, திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க. ராஜேந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட இயக்கத்தினர் கலந்துக்கொண்டனர். இப் போராட்டத்தில் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.