இலங்கை பாதுகாப்பு துறையின் இணையதளத்தில் தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி குறித்து அவதூறாக கட்டுரை வெளியிடப்பட்டதை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014
இலங்கை
பாதுகாப்பு துறையின் இணையதளத்தில் வெளியான
கட்டுரையில், தமிழக முதல்அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான
ஜெயலலிதா,
பிரதமர் நரேந்திரமோடிக்கு மீனவர் பிரச்சினை தொடர்பாக கடிதம் எழுதுவது
குறித்து அவதூறான கருத்துக்களுடன் சித்திரம் வெளியிடப்பட்டதை கண்டித்து
02.08.2014 அன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம்
அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம்
நடத்தப்பட்டது.
முற்றுகை போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ். சண்முகம், வை.காவேரி, துணை பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ. வேணுகோபால், பொருளாளர் அக்ரம்கான், தலைமை நிலைய செயலாளர் கண்ணன், தொழிற் சங்க தலைவர் சைதை சிவராமன், விருகை வீரராகவன், முத்துராஜ், தேவராஜ். திருவள்ளூர் செந்தில் குமார், மகளிரணி வெள்ளையம்மாள் உள்பட ஏராளமான நிர்வாகிகள் இலங்கை அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி இலங்கை துணை தூதரகத்தையும் முற்றுகையிட முயன்ற போது காவல்துறையினர் தடுத்தனர். பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக