தமிழக
வாழ்வுரிமைக் கட்சியின் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள்
கூட்டம் 21.01.2014 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநில துணை பொது செயலாளர் ராமரவி அலெக்ஸ் தலைமை
தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.ஆர்.குமரன் வரவேற்று பேசினார். மாவட்ட
தலைவர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் சேட், சுதாகர், அய்யனார்,
கிருஷ்ணமூர்த்தி, பலராமன், மணிகண்டன், பூண்டி ரவி, ஜெகதீசன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
பொது செயலாளர் காவேரி, அமைப்பு செயலாளர்
கொற்றவன் மூர்த்தி, துணை பொது செயலாளர் கனல் கண்ணன், மாநில செயற்குழு
உறுப்பினர் ஜோதிலிங்கம், மாநில தொழிற்சங்க செயலாளர் பன்னீர்செல்வம், மாநில
துணை தலைவர் சசிக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் அலேக்ஸ்தீனா, பாசறை
செயலாளர் மின்னல் தினேஷ், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் இளம்வழுதி, மாவட்ட
துணை செயலாளர் டேவிட், மாவட்ட தொண்டர்படை செயலாளர் சுமன், மாவட்ட மாணவரணி
தலைவர் சிலம்பரசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்று ஆற்றிய சிறப்புரை:
வன்னியர்களை பயன்படுத்திக் கொண்டு பதவியைப் பிடித்த ராமதாஸ், அவர்களுக்காக
எதுவும் செய்யவில்லை. பா.ம.க மத்தியில் கூட்டணி அரசில் இருந்தபோது நேர்முக
உதவியாளர் பதவி உள்பட அனைத்து பதவிகளும் அவர்களது உறவினர்களுக்கே
வழங்கப்பட்டன. பா.ம.க.வுக்கு கொடி பிடித்தவர்களுக்காகவும், பா.ம.க.வின்
வளர்ச்சிக்காக வழக்குகளை சந்தித்தவர்களுக்காக இவர்கள் ஒன்றும் செய்யவில்லை.
இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு கூட
ஒன்றும் செய்யவில்லை. இந்த இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்த 27
குடும்பங்களின் வாரிசுகளுக்கே ஒன்றும் செய்ய முடியாதவரா 2 கோடி வன்னியர்களை
காக்கப்போகிறார்? ஆனால் வன்னியர்களுக்கு பாமக செய்யத் தவறியதை தமிழக
வாழ்வுரிமைக் கட்சி செய்யும். வன்னியர்கள் மட்டும் இன்றி தமிழ்ச்
சமூகத்தில் பிறந்த அனைவருக்காகவும் தமிழக வாழ்வுரிமைக்கட்சி பாடுபடும்.
வரும் பிப்ரவரி 23-ம் தேதி எங்கள் கட்சியின் மாநில மாநாடு சேலத்தில் நடைபெற
உள்ளது. அப்போது கூட்டணி குறித்த அறிவிப்பை நாங்கள் வெளியிடுவோம் என்றார்.
செயல்வீரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள்:
1. இலங்கையில் ஐ.நா மேற்பார்வையில் சுதந்திரமான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்,
2. ஐ.நா. அவையில் நடைபெறும் மனித உரிமை மாநாட்டில் இது குறித்து இந்தியா வலியுறுத்த வேண்டும்,
3. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதலை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டிப்பது,
4. செங்கல்பட்டு, பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோருவது
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கோலியனூர், காணை, திருநாவலூர், விக்கிரவாண்டி,
திருவெண்ணைநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள்
தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் பிரகாஷ் நன்றி
கூறினார்.
Read more...