அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரானக் கூட்டமைப்பு சார்பில் ஐயா பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி உள்ளிட்டோர் மீதான பொய் வழக்குகளைக் கைவிடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் - தி.வேல்முருகன் பங்கேற்ப்பு

சனி, 23 நவம்பர், 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாதென வலியுறுத்தி, இந்திய அரசு அலுவலகங்களைத் தாக்கிய திராவிடர் விடுதலைக் கழக சென்னை - சேலம் தோழர்கள் 7 பேர் மீதும், அதன் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் மீதும் தமிழக அரசால் ஏவப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், முள்ளிவாய்க்கால் முற்றம் எழுப்பிய ஐயா பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் மீதான பொய் வழக்குகளைக் கைவிடக் கோரியும், சென்னையில் இன்று (23.11.2013) காலை, 'அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரானக் கூட்டமைப்பு' சார்பில், பல்வேறு கட்சி - இயக்கங்கள் பங்கெடுத்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் காலை 11 மணிளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையேற்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் திரு. தெகலான் பாகவி, தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தோழர் தங்கத்தமிழ்வேலன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழர் குடியரசு முன்னணி செயலாளா வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் தோழர் தமிழ்நேயன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை செயலக உறுப்பினர் தோழர் சதீஷ், சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பரிமளா உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
 
 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP