தமிழகத்தில் செயல்படும் இலங்கைக்கான தூதரக அலுவலகத்தை அகற்றும் போராட்டம் மத்திய அரசுக்கு தி.வேல்முருகன் எச்சரிக்கை
சனி, 9 பிப்ரவரி, 2013
சேத்தியாத்தோப்பு:
தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்றும் போராட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்க வேண்டாம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேத்தியாத்தோப்பில்
நடந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு
வந்த கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் அளித்த பேட்டி:
காவிரி நதிநீர் பிரச்னையில் 2.44 டி.எம்.சி., தண்ணீர் திறக்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும் கூட கர்நாடக அரசு பிடிவாதமாக மறுக்கிறது. விவசாயத்திற்கு தண்ணீரின்றி லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய பயிர்கள் அழிந்து விவசாயிகள் வாடிக் கொண்டிருக்கிறார்கள். காலம் தாழ்த்தாமல் தண்ணீரை திறக்க மத்திய அரசு, உச்சநீதி மன்றம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை அதிபர் ராசபக்சே அடிக்கடி இந்தியாவுக்கு அழைப்பது தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. மார்ச் 5ம் தேதி ஐக்கிய நாடுகள் சபை கூட்டும் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் உலகில் உள்ள 10 கோடி தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இலங்கையில் நடந்த படுகொலைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா கொண்டு வரவேண்டும். இக்கோரிக்கைகளை ஏற்க மறுத்து மாறாக தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவு அளிப்பது, அவர்களைக் காப்பாற்றுவது, உதவிகளைத் தொடர்வது என மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டால், தமிழ் ஆர்வலர்கள், இலங்கைத் தமிழர்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்ட இன உணர்வாளர்களை ஒன்று திரட்டி தமிழகத்தில் செயல்படும் இலங்கைக்கான தூதரக அலுவலகத்தை அகற்றும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இதுபோன்ற சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்க வேண்டாம். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக