இலங்கை மீது பொருளாதாரத் தடையை உடனே அமல்படுத்த பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

புதன், 20 பிப்ரவரி, 2013

இலங்கை மீது பொருளாதாரத் தடையை உடனே அமல்படுத்த பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது இளைய மகனான 12 வயது பாலகன் பாலச்சந்திரனை மிகக் கோரமான முறையில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசை மிகவும் வன்மையான குரலில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆறுதல் தரக் கூடியது. மேலும் "தற்போதுள்ள இலங்கை அரசின் தன்மை, மனப்பான்மை, எண்ணம் ஆகியவை முன்பு ஜெர்மனி நாட்டில் ஹிட்லரின் ஆட்சியில் நடந்ததுதான் நினைவுக்கு வருகிறது. ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அதேபோல், இன்று இலங்கை அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்திருக்கிறது. எனவே மத்திய அரசு இதனை கவனத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் ஒத்த கருத்துடைய நாடுகளுடன் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை கவனத்தில் கொண்டு இவற்றிற்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும். இதுதவிர, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும். 12 வயது பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மிகப்பெரிய போர்க்குற்றம். போர்க்குற்றம் நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தி அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும்." என்றும் மாண்புமிகு தமிழக முதலவர் வலியுறுத்தியிருப்பதும் பாராட்டுக்குரியதாகும்.
பாலகன் பாலச்சந்திரன் படுகொலை கண்டு ஒட்டுமொத்த தமிழினமே கொந்தளித்துக் கிடக்கிறது.. தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து தமிழக அரசியல் தலைவர்கள், பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு, இலங்கை மீது உடனே பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும். இந்திய மண்ணில் இனப்படுகொலை நாடான சிங்களவர்களின் எந்த ஒரு நிறுவனமுமே இயங்க அனுமதிக்ககக் கூடாது. இந்தியாவில் செயல்படும் இலங்கை தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் ஆகியவற்றறை உடனே மத்திய அரசு இழுத்து மூட வேண்டும். சிங்களவரின் மதம் சார்ந்த அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். இலங்கைக்கு சொந்தமான விமான சேவைகளை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது. போர்க்கால அடிப்படையில் இந்நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பு. இதையும் மீறி இந்திய மண்ணில், தமிழகத்தில் இலங்கை நிறுவனங்கள் இயங்குமேயானால் இலங்கை தூதரகம் உள்ளிட்ட அவை அனைத்தையும் நிரந்தரமாக அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மேற்கொள்ளும் என்று மத்திய அரசை எச்சரிக்கிறேன்.

இதேபோல் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட கடந்த 22 ஆண்டுகாலமாக இடைவிடாது போராடி தமிழக மக்களுக்கு இடைக்கால மகிழ்ச்சியைப் பெற்றுத் தந்ததற்காக மாண்புமிகு தமிழக முதல்வரை தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாராட்டுகிறது. அரசிதழில் தற்போது வெளியிடப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கர்நாடகா செயல்படுத்த தேவையான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தின் இனம், மொழி நலன்களுக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் மேற்கொள்ளும் உறுதியான நடவடிக்கைகள் அனைத்துக்கும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more...

சென்னை ஐக்கிய நாடுகள் அலுவலக முற்றுகைப் போராட்டம் : பண்ருட்டி தி .வேல்முருகன் பங்கேற்பு

திங்கள், 11 பிப்ரவரி, 2013

Read more...

ராச பக்சே இந்திய வருகையைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்ற போராட்டங்கள்

சனி, 9 பிப்ரவரி, 2013

 ராசபக்சே இந்திய வருகையைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்ற போராட்டங்கள் குறித்து வார இதழ்களில் வெளி வந்துல்லக் கட்டுரைகள் 





Read more...

தமிழகத்தில் செயல்படும் இலங்கைக்கான தூதரக அலுவலகத்தை அகற்றும் போராட்டம் மத்திய அரசுக்கு தி.வேல்முருகன் எச்சரிக்கை

சேத்தியாத்தோப்பு:

தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்றும் போராட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்க வேண்டாம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 


சேத்தியாத்தோப்பில் நடந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்த கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் அளித்த பேட்டி:

காவிரி நதிநீர் பிரச்னையில் 2.44 டி.எம்.சி., தண்ணீர் திறக்க  உச்ச நீதி மன்றம்  உத்தரவிட்டும் கூட கர்நாடக அரசு பிடிவாதமாக மறுக்கிறது. விவசாயத்திற்கு தண்ணீரின்றி லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய பயிர்கள் அழிந்து விவசாயிகள் வாடிக் கொண்டிருக்கிறார்கள். காலம் தாழ்த்தாமல் தண்ணீரை திறக்க மத்திய அரசு, உச்சநீதி மன்றம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை அதிபர் ராசபக்சே அடிக்கடி இந்தியாவுக்கு அழைப்பது தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. மார்ச் 5ம் தேதி ஐக்கிய நாடுகள் சபை கூட்டும் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் உலகில் உள்ள 10 கோடி தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இலங்கையில் நடந்த படுகொலைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா கொண்டு வரவேண்டும். இக்கோரிக்கைகளை ஏற்க மறுத்து மாறாக தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவு அளிப்பது, அவர்களைக் காப்பாற்றுவது, உதவிகளைத் தொடர்வது என மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டால், தமிழ்  ஆர்வலர்கள், இலங்கைத் தமிழர்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்ட இன உணர்வாளர்களை ஒன்று திரட்டி தமிழகத்தில் செயல்படும் இலங்கைக்கான தூதரக  அலுவலகத்தை அகற்றும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இதுபோன்ற சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்க வேண்டாம். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

Read more...

ராஜபக்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தி.வேல்முருகன் தலைமையில் தமிழக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்

புதன், 6 பிப்ரவரி, 2013





















சென்னை: 

       இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

        இலங்கை அதிபர் ராஜபக்சே  3-வது முறையாக இந்தியாவுக்கு 8-ந் தேதி வருகை தர இருக்கிறார். அவரது இந்திய பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கை.  ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் ஒரு கட்டமாக தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்தது.

        இதற்காக நேற்று (05/02/2013) காலை சென்னை சேப்பாகம் அரசு விருந்தினர் மாளிகை முன்பாக வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கூடினர். பின்னர் அங்கிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி கடற்கரை சாலை வழியே ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர்  தடுத்து நிறுத்தினர். பின்னர் வேல்முருகன் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்! கைது செய்ய திணறிய காவல்துறை!


          போர்க்குற்றவாளி ராஜபக்சேவை அனுமதிக்கும் இந்திய அரசைக் கண்டித்து மத்திய அரசின் பிரதிநிதியான தமிழக ஆளுநர் மாளிகையை நோக்கி நேற்று 05/02/2013  மாபெரும் முற்றுகைப் போராட்டம் பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் நடந்தது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த சுமார் 5000 தொண்டர்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வந்தனர். அதில் எல்லோரையும் கைது செய்ய முடியாமல் திணறிய காவல் துறை 2000 பேர்களை மட்டும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தது. சென்னையில் நடக்கும் ஈழப் போராட்டத்தை பொறுத்தவரை இவ்வளவு பெரிய மக்கள் தொகையை திரட்டி இதுவரை யாரும் போராட்டம் செய்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு இன்று பண்ருட்டி வேல்முருகன் பெரும் தொண்டர் படையை திரட்டி போராட்டம் செய்துள்ளார்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இரண்டாமாண்டு துவக்க விழா பற்றி வார இதழ்களின் கட்டுரைகள்

திங்கள், 4 பிப்ரவரி, 2013

 தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இரண்டாமாண்டு துவக்க விழா பற்றி  வார இதழ்களின் கட்டுரைகள்


இந்தியா டுடே கட்டுரை :

 

குமுதம் ரிப்போர்டர் கட்டுரை:



 நக்கீரன் கட்டுரை :


Read more...

ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து பிப்ரவரி 5 ல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் - தி.வேல்முருகன் அறிவிப்பு

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013




ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து  பிப்ரவரி 5, 2013  அன்று  தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்  தமிழக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து  தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை 

        ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணணையக் கூட்டத்தில் போர்க்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை சர்வதேச நாடுகள் கொண்டுவர உள்ளன. இதிலிருந்து தம்மை எப்படியும் இந்தியா காப்பாற்றிவிடும் என்ற இறுமாப்பில் போர்க்குற்றவாளி ராஜபக்சே இருக்கிறான். இதற்காக அண்மையில் அந்நாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான குழு இந்தியாவுக்கு வந்து சென்றது. இதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி அப்போதே சுட்டியும் காட்டியது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் ஆதரவு தமக்கு இருக்கிறது என்று காட்டுவதற்காகவே போர்க்குற்றவாளி ராஜபக்சே இந்தியாவுக்கு வரும் 8-ந் தேதி வருகை தர இருக்கிறான்.

       தமிழக மக்களின், தமிழக அரசின் உணர்வுகளை ஒட்டுமொத்தமாக அலட்சியம் செய்து, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை புறந்தள்ளி கொடியவன் போர்க்குற்றவாளி ராஜபக்சேவை காப்பாற்றும் வகையில் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் வர அனுமதித்திருக்கிறது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து இந்திய அரசின் பிரதிநிதியாக தமிழகத்தில் பதவியில் இருக்கும் ஆளுநர் மாளிகையை வரும் 5-ந் தேதியன்று காலை 11 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தீர்மானித்திருக்கிறது! யுத்தம் முடிந்து பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இலங்கை தமிழர் தாயகப் பகுதி சிங்கள தேசமாக மாற்றப்பட்டு வருகிறது. இந்து ஆலயங்கள், முஸ்லிம், கிறித்துவ வழிபாட்டுத் தலங்கள் நிர்மூலமாக்கப்பட்டு புத்த விகாரைகளாகிப் போய்விட்டன. இலங்கையில் இதுநாள் வரை போர்க்குற்றவாளிகள் எவருமே அடையாளம் கூட காட்டப்படவில்லை. விசாரணை கூட தொடங்கப்படவில்லை. முள்ளி வாய்க்கால் யுத்தத்தில் சரணடைந்த பேபி, யோகி, ரத்தினதுரை போன்ற மூத்த போராளிகள் கதி என்ன என்று தெரியவில்லை.

          தற்பொழுது கூட இலங்கையின் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்த மகிந்த ராஜபக்சேவை சர்வதேச சமூகமே கண்டிக்கிறது. நீதித்துறைக்கு சவால்விடும் சர்வாதிகாரி ராஜபக்சேவுக்கு எதிராக விசாரணை நடத்த சர்வதேச சட்டவாளர்கள் சங்கம் சார்பில் சென்ற இந்திய நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மாவுக்கு விசா கூட தர மறுத்திருக்கிறது சிங்கள அரசு. இப்படிப்பட்ட கொடுங்கோலனுக்குத்தான் சிறிதும் வெட்கமே இல்லாமல் மத்திய அரசு முட்டுக் கொடுத்து இந்தியாவுக்குள் செங்கம்பள வரவேற்பு கொடுக்கிறது! இத்தகைய மத்திய அரசின் தமிழின விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கவே இந்திய அரசின் பிரதிநிதியான தமிழகத்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்துகிறது.

            பிப்ரவரி 5-ந் தேதி காலை 11 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பாக இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடற்கரை சாலை வழியாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்! தமிழின விரோத மத்திய அரசுக்கு எதிராக, போர்க்குற்றவாளியை அனுமதிக்கும் இந்திய அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து பெருந்திரளாய் தமிழர்களாய் ஒன்று திரண்டு முற்றுகையிடுவோம்! வாரீர்!!


 
நாள்: பிப்ரவரி 5, 2013

நேரம்: காலை 11 மணி
இடம்: சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகைமுன்பு இருந்து ஊர்வலம் தொடக்கம்

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP