தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
செவ்வாய், 31 டிசம்பர், 2013
அகிலமே
கொண்டாடும் ஆங்கில புத்தாண்டு எல்லோருக்கும் வளமான ஆண்டாக அமைய வேண்டும்
என்று வாழ்த்தி தனிமனித முன்னேற்றம் தான் நமது முன்னேற்றம் என்பதை
இளைஞர்கள் உணர்ந்து ஈடுபாடு உடனும் கடினமாகவும் உழைக்க வேண்டும் அப்போது
தான் நாம் நினைக்கின்ற லட்சியம் நிறைவேறும். தமிழர் நலம் உயர வளம் உயர
தரணியிலே திக்கெட்டும் வாழ்கின்ற தமிழர்களின் எண்ணமெல்லாம் ஈடேற சர்வதேச
அரங்கினுள்ள தமிழர்களின் உரிமைக்குரல் ஒலித்திடவும் அதன் விளைவாய்
தமிழர்களின் நிலை உயரவும், சிறக்கவும் உலக அமைதியின் மேன்மை நெறியில்
அனைவரும் அன்பு நிறைந்து வாழவும், உரிமையும் மேம்பட பிறக்கட்டும் இனிய
புத்தாண்டு என்று தொடர்ந்து எமது வளர்ச்சிக்கு ஆதரவு தரும்
பத்திரிக்கையாளர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், பொது மக்கள்
அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.வேல்முருகன்
நிறுவனத் தலைவர்,
தி.வேல்முருகன்
நிறுவனத் தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி