மெரினாவில் ஈழத்தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி : பாமக இணைப் பொதுச்செயலாளர் தி.வேல்முருகன் பங்கேற்பு
|
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் நாளை உலகெங்கிலும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐநா கடைபிடித்து வருகிறது.
இலங்கை அரசின் சித்திரவதைகளூக்கு ஆளாக்கப்பட்டு இன்னுயிர் துறந்தல் ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று ( 26.6.2011) மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.
பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக இணைப் பொதுச்செயலாளர் தி.வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா உட்பட பல்லாயிரக்கணக்காணோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பழ.நெடுமாறன் எழுச்சி உரை ஆற்றினார். சீமான் எழுச்சி கோஷங்கள் எழுப்பினார். இந்த நிகழ்வு கட்சி சார்பற்ற நிகழ்வாகவே இருந்தது.
லேபிள்கள்:
அஞ்சலி,
இலங்கைத் தமிழர்,
எம்.எல்.ஏ.வேல்முருகன்,
தி.வேல்முருகன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)