பண்ருட்டி தி.வேல்முருகன், பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பு

புதன், 2 நவம்பர், 2011


சென்னை : 

          பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனை,  முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் திடீரென சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது உங்களது ஆதரவாளர்களுடன்  பாஜகவுக்கு வந்து விடுங்கள் என்று வேல்முருகனுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது.

         சமீபத்தில் பாமக மாநில இணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் வேல்முருகன். வழக்கமாக இதுபோன்ற முக்கியத் தலைவர்கள் பாமகவிலிருந்து நீக்கப்பட்டால் கட்சியில் பெரிய அளவில் சலசலப்பு ஏற்படாது. காரணம், பாமக என்றால் ராமதாஸ், ராமதாஸ் என்றால் பாமக என்ற ஒரே அம்சம் மட்டுமே பார்க்கப்பட்டு வந்ததால். ஆனால் வேல்முருகன் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. வெளியில் அமைதியாக இருப்பது போல தெரிந்தாலும், உள்ளுக்குள் ஏகப்பட்ட புயல்கள் சீறிய் பாயத் தொடங்கியுள்ளது.

       கட்சியின் இளைஞர் பட்டாளத்த வளர்த்து வலுவாக்கியவர் என்பதால் வேல்முருகன் படு வேகமாக செயல்பட்டு வருகிறார். தனது ஆதரவாளர்களை படு துரிதமாக சேகரித்து வருகிறார். அவரது தீவிர முயற்சியின் விளைவாக கிட்டத்தட்ட 150 ஒன்றியச் செயலாளர்களும், 100 நகரச் செயலாளர்களும் வேல்முருகனுக்கு ஆதரவாக திரும்பியுள்ளனராம். இவர்களை ஒருங்கிணைத்து விரைவில் புதிய இயக்கம் ஆரம்பிக்கும் திட்டத்தில் உள்ளார் வேல்முருகன்.

           அதற்கு முன்னதாக கடலூர் மாவட்ட பாமகவை சுத்தமாக காலி செய்து விடவும், நெய்வேலி அனல் மின் கழக பாட்டாளி தொழிற்சங்கத்தை காலி செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார். வேல்முருகனுக்கு பல இடங்களில் திமுகவினரும் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து உதவி செய்து வருகின்றனர்.

        இந்த சூழ்நிலையில்  பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனை வேல்முருகன் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது உங்களது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு வந்து விடுங்கள் என்று கேட்டாராம் பொன்.ராதா. யோசித்துச் சொல்வதாக கூறி விட்டு வந்துள்ளார் வேல்முருகன். இருப்பினும் தற்போதைக்கு எந்தக் கட்சியிலும் சேராமல் தனியாக இயக்கம் கண்டு தனது செல்வாக்கை நிரூபித்த பின்னர் வேறு கட்சியில் இணையலாம் அல்லது கூட்டணி வைக்கலாம் என்ற எண்ணத்தில் வேல்முருகன் இருக்கிறார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP