தமிழர் திருநாளில் மக்களின் ஆதரவோடு தனிக் கட்சித் தொடக்கம் : பண்ருட்டி.தி.வேல்முருகன் பேட்டி
வியாழன், 17 நவம்பர், 2011
சென்னை:
முன்னாள் பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன் சென்னையில் அளித்த பேட்டி :
பா.ம.க.வின் அடிப்படை பொறுப்பில் இருந்து என்னை நீக்கி இருக்கிறார்கள். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. என்னை நீக்கியதற்கான காரணத்தை இதுவரை டாக்டர் ராமதாஸ் கூறவில்லை. கட்சி கூட்டத்தில் நான் பேசும்போது, சிலர் என்னை எதிர்த்து பேசினார்கள். அப்போது டாக்டர் ராமதாஸ்-அன்புமணி தட்டிக் கேட்கவில்லை. பா.ம.க. தொடங்கப்பட்ட போது வகுத்த கொள்கைகளை கடை பிடிக்கவில்லை. அந்த குறிக்கோள்களை சுட்டிக் காட்டி வலியுறுத்தும் போது என்னை எதிரியாக நினைத்து வெளியேற்றுகிறார்கள்.
என் உயிர்மூச்சு இருக்கும் வரை நான் மீண்டும் பா.ம.க.விற்கு செல்ல மாட்டேன். விரைவில் தனிக்கட்சி தொடங்குகிறேன். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல தை மாதம் பிறந்தவுடன் கட்சி பெயரை அறிவிப்பேன். கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் குறித்து என்னிடம் தொடர்பில் உள்ளவர்களுடன் கலந்து பேசி அறிவிப்பேன். பா.ம.க. வில் உள்ள 80 சதவீத தொண்டர்கள் எனக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், பல்வேறு சமூக அமைப்பு தலைவர்கள் மற்றும் பா.ம.க. தொண்டர்கள் இணைய தளம் மூலம் என்னிடம் பேசி வருகிறார்கள். அவர்களது ஆலோசனைப்படி கட்சியை தொடங்குவேன். எந்த கட்சியுடனும் கூட்டு சேர மாட்டேன். அதற்காக எந்த கட்சியையும் நான் எதிர்க்க தயாராக இல்லை.
தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பல கட்சிகளில் நல்லவர்கள் இருக்கிறார்கள். இதனால் எந்த கட்சியையும் எதிர்ப்பது எனது நோக்கம் அல்ல. பா.ம.க.வில் நான் இருந்த போது பல மாநாடுகளை நடத்தி இருக்கிறேன். பல தேர்தல்களை சந்தித்து இருக்கிறேன். அதே போல் இந்த கட்சியையும் சிறப்பான முறையில் நடத்துவேன். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

1 கருத்துகள்:
மக்கள் நியாத்தின் பக்கமே துனிந்து வெல்வோம் வாங்க அண்ணே ...
கருத்துரையிடுக