கடலூரில் பண்ருட்டி தி.வேல்முருகன் ஆலோசனை: ஆதராவளர்கள் வாகனங்களில் வந்து குவிந்தனர்
புதன், 2 நவம்பர், 2011
கடலூர்:
பண்ருட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ம.க.வின் இணை பொது செயலாளருமான வேல்முருகன் கட்சியில் இருந்து எந்தவித நியாமான காரணம் இன்றி நீக்கப்பட்டுள்ளார். இதையொட்டி அவரது ஆதராவளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
கடலூரில் கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலர் விலகினார்கள். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்த வேல்முருகன் முடிவு செய்தார். கடலூர் டவுன் ஹாலில் ஆதராவளர்கள் கூட்டம் நடத்த இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையில் இருந்தே கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதராவளர்கள் வாகனங்களில் வந்து குவிந்தனர்.
கூட்டத்தில் வேல்முருகன் கலந்து கொண்டு பேசுகிறார். அடுத்த கட்ட முடிவு எடுப்பது குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டம் நடைபெறுவதையொட்டி கடலூர் டவுன்ஹால் ரோடு பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் அசம்பாவித சம்பவம் நடை பெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக