மாற்று கட்சியில் இணையும் எண்ணம் இல்லை : தி.வேல்முருகன் அறிவிப்பு

புதன், 2 நவம்பர், 2011


           முறையான காரணம் இன்றி முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.   இந்த தகவல் வெளியானதை அடுத்து கடலூர், பண்ருட்டி, நெய்வேலி பகுதிகளில்  ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் கட்சி அலுவலகம், நெய்வேலியில் உள்ள பா.ம.க. தொழிற்சங்க அலுவலகம் சூறையாடப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ம.க. கொடிக்கம்பங்களை அகற்றினார்கள். இந்த நிலையில் பா.ம.க. வில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன் தி.மு.க.வில் சேரப்போவதாக கடலூர் பகுதியில் நேற்று தகவல் பரவியது. 

இதுபற்றி வேல்முருகன் கூறியது
 
            வேறு எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் எனக்கு இல்லை. இப்போதும் பா.ம.க. வில் தான் இருக்கிறேன். நான் நீக்கப்பட்டதாக கூறப்பட்டிருப்பது பற்றி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ம.க. தொண்டர்களிடம் நீதி கேட்பேன். நான் நீக்கப்பட்டது சம்பந்தமாக இதுவரையிலும் எனக்கு எந்த தகவலும் முறைப்படி அனுப்பப்பட வில்லை. அப்படி ஒரு தகவல் வந்தால் அடுத்த கட்ட நடவடிக்கையை பின்னர் முடிவு செய்வேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP