பண்ருட்டி தி.வேல்முருகன் புதிய கட்சி தொடங்க திட்டம் - பிரபாகரன் பிறந்த நாளில் கட்சியின் பெயர் அறிவிப்பு (நக்கீரன் செய்தி)
புதன், 9 நவம்பர், 2011
நக்கீரன் செய்தி
பாமக முன்னாள் இணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தவர் வேல்முருகன். இரண்டு முறை பண்ருட்டி சட்டமன்ற உறுபினராக பதவி வகித்தவர். இவரின் வளர்ச்சியை பிடிக்காத சிலரின் தூண்டுதலால் கட்சித் தலைமை முறையான காரணம் இன்றி பா.ம.கவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது. பா.ம.கவில் நீக்கப்பட்ட பண்ருட்டி தி.வேல்முருகன் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் புதிய கட்சி துவங்க இருக்கிறார்.
பண்ருட்டி வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து தமிழகம் முழுவதும் நீக்கப்பட்டவர்களை சுற்றுப்பயணம் செய்து சந்தித்து ஆதரவு திரட்டப் போவதாக அறிவித்திருந்தார் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல பா.ம.க. ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவிதுள்ளனர். பண்ருட்டி வேல்முருகனையும் அவரது ஆதரவாளர்களையும் தங்கள் கட்சியில் சேர்க்க முன்னனி கட்சிகள் மறைமுகமாக பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் பண்ருட்டி வேல்முருகன் புதிய கட்சி தொடங்க இருக்கிறார். வருகிற 27-ந் தேதி விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினம் பண்ருட்டி வேல்முருகன் புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கபடுகிறது. கட்சியின் பெயர் மற்றும் கொடியை பற்றி அவர் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக