பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமை ஏற்கவேண்டும் - சீமான் ஆசை

வெள்ளி, 25 நவம்பர், 2011



Posted Image 


குமுதம் ரிப்போட்டர்  செய்தி
    நான்கு வருடங்களுக்கு முன் சீமான் இயக்கிய ‘வாழ்த்துகள்’ படத்தில் நடித்ததற்காக வேல்முருகனை எக்கச்சக்கமாக ‘வாழ்த்தி’ வசைபாடியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்! தற்போது இந்த விஷயத்தைத் தன் நண்பனான சீமானிடம் சொல்லி மனம் குமுறியிருக்கிறார் வேல்முருகன்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமா
ன் குமுதம் ரிப்போட்டர் இதழுக்கு அளித்த பேட்டி
          ‘‘வேல்முருகன் பெரியார், மார்க்சிஸ சிந்தனை உடையவர். வேல்முருகன் சிறு வயது முதலே தமிழ்த் தேசிய தலைவர் பிரபாகரன் மீது பற்றுக் கொண்டவர். இதனால்தானோ என்னவோ நாங்கள் இருவரும் தமிழ்த் தேசிய கூட்டங்களில் அதிகளவில் பங்கேற்றோம். என்னைப் போல் அவருக்கும் தமிழின உணர்வு அதிகம்..


http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_35995119811.jpg

        பாட்டாளி மக்கள் கட்சியில் வேல்முருகன் துடிப்புமிக்க இளைஞராக வலம் வந்தார். இப்படிப்பட்ட நபரை வெளியுலகத்திற்குக் கொண்டு வர ஆசைப்பட்டேன். அதன் விளைவாகத்தான் நான் இயக்கிய ‘வாழ்த்துகள்’ திரைப்படத்தில் நடிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொண்டேன். அவரும் அதற்கு சம்மதித்து நடித்துக் கொடுத்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக வேல்முருகனை ராமதாஸ் பலர் முன்னிலையில் மிகக் கடுமையான சொற்களால் திட்டித் தீர்த்திருக்கிறார். இந்த விஷயம் எனக்கு இப்போதுதான் தெரியும். இதுவரையில் அவர் அந்தக் கசப்பான சம்பவத்தைச் சொன்னதே இல்லை. நான் வருத்தப்பட்டுவிடுவேனோ என்று நினைத்து என்னிடம் சொல்லாமல் இருந்தி ருக்கலாம்.

        
சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க. காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது வேல்முருகனுக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் கட்சியின் மீது உள்ள விசுவாசத்தால் அந்தக் கூட்டணியில் தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் பா.ம.க.வை அ.தி.மு.க.வோடு இணைக்கும் முயற்சியும் எடுத்தோம். ஆனால் பலனில்லை. அப்போது நான் அ.தி.மு.க.விற்கு. ஆதரவாக வாக்கு சேகரித்தேன். அவர் எதிரணியில் இருந்ததால் அவருக்கு ஆதரவாக வாக்கு கேட்க முடியாத சங்கடம் ஏற்பட்டது. இந்நிலையில், என்னிடம் ‘இந்த சட்டமன்றத் தேர்தலில் எனக்கு போட்டியிட விருப்பமில்லை’ என்று வேதனையோடு கூறினார். நான்தான் அவரை சமாதானப்படுத்தி ‘நீங்கள் கட்டாயம் போட்டியிட வேண்டும்’ என்று கூறினேன். அவர் தோற்றுப்போய் விட்டார்.

       வேல்முருகனை பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது பா.ம.க.விற்குதான் இழப்பே தவிர வேல்முருகனுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாம.க. ஒரு நல்ல தளபதியை இழந்துள்ளது. அவருக்கு ஆறுதல் கூறச் சென்றபோது என்னிடம் மிகவும் வருத்தப்பட்டார். நான் ‘நாம் தமிழர்’ கட்சியைத் தொடங்கியபோது எனக்கு எந்த அரசியல் அனுபவமும் இல்லாததால் கொளத்தூர் மணியை தலைமை தாங்குமாறு அவரை அழைத்தேன். அவர் மறுத்துவிடவே, நல்ல அரசியல் அனுபவம் கொண்ட வேல்முருகனை தலைமை தாங்குமாறு அழைத்தேன். அப்போது அவர் மறுத்துவிட்டார். இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டதாகத்தான் நினைக்கிறேன்.


       உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ள ‘நாம் தமிழர்’ கட்சிக்கு வேல்முருகன் போன்றவர்கள் வந்தால் இன்னும் வலிமை பெறும். தற்போது அவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் அவரால் முடிவெடுக்க முடியாது என்பதை நான் அறிவேன். அவரின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்’’ என்று முடித்தார் சீமான்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP