சேவல் வெ.ஏழுமலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேவல் வெ.ஏழுமலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆரணி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் வெ.ஏழுமலையை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பிரசாரம்

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

ஆரணி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சேவல் வெ.ஏழுமலை அவர்களுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வந்தவாசி தேரடியில் 03.04.2014 (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். 
 
பிரசாரக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட அமைப்பாளர் வந்தவாசி. சுரேஷ், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் வே.குணசீலன், தொகுதி பொறுப்பாளர்கள் தாடி மா.ராசு, டி.சகுந்தலா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஈ.பொன்னுசாமி, எம்ஜிஆர் மன்ற மாவட்டத் தலைவர் ஜெ.பாலு, தொகுதிச் செயலாளர் கே.பாஸ்கர் ரெட்டியார், நகரச் செயலாளர் எம்.பாஷா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

ஈழத் தமிழர்களை கொன்ற இலங்கை அதிபருக்கு ஆதரவு அளித்தது மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்தி. இவர்கள் இருவரையும் ஆதரவளித்து தூக்கி நிறுத்தியது தி.மு.க.தான். அப்போது மத்திய அரசில் சுகாதாரத் துறை அமைச்சர் பதவி வகித்த அன்புமணி ராமதாஸ் கூட பதவியை தூக்கி எறிய முன்வரவில்லை. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறிவந்தார். ஆனால் இப்போதோ மதிமுக, தேமுதிக கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளார். விஜயகாந்த்தை அவதூறாக பேசிவிட்டு இப்போது அவருடன் கூட்டணி வைத்துள்ளார். இதன்மூலம் முரண்பாடுகளின் மொத்த உருவமாக டாக்டர் ராமதாஸ் திகழ்கிறார் என்றார்.

உலகில் உள்ள தமிழர்களின் நம்பிக்கை ஒளியாக ஜெயலலிதா திகழ்கிறார். இத்தாலியிலிருந்து வந்த சோனியா காந்தி இந்திய பிரதமரையும், குடியரசுத் தலைவரையும் முடிவு செய்யும்போது 7 கோடி தமிழர்களின் தலைவியாக உள்ள ஜெயலலிதா ஏன் பிரதமராக முடியாது?.
 







 

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP