வாக்குப்பதிவு எந்திரங்கள் உடைப்பு: பா.ம.க.வேட்பாளர் வேல்முருகன் கண்டனம்;

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

நெய்வேலி:
          சட்டசபை தேர்தலின் போது நெய்வேலி தொகுதி குள்ளஞ்சாவடியை அடுத்த சமட்டிக்குப்பத்தில் 2 வாக்குச்சாவடிகளில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒரு கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு நெய்வேலி தொகுதி பா.ம.க. வேட்பாளரும், கட்சியின் மாநில துணை பொது செயலாளருமான வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-


            சமட்டிக்குப்பம் மற்றும் கிருஷ்ணன் பாளையம் பகுதி மக்கள் சுமார் 2 ஆயிரம் பேர் எனக்கு வாக்களித்திருந்தனர். இதனை பொறுக்காத எதிர் அணியை சேர்ந்தவர்கள் ரவுடி கும்பல் மூலம் சமட்டிக்குப்பம் வாக்குச்சாவடியில் சீல் வைக்கப்பட்டிருந்த 2 மின்னணு எந்திரங்களையும் அடித்து நொறுக்கி சூறையாடி விட்டனர். அந்த கும்பல் ஜனநாயக கடமையாற்ற வந்த பொது மக்களை மிரட்டி வாக்குப்பதிவு எந்திரங்களை உடைத்துள்ளனர். நாளை (15-ந் தேதி) மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ரவுடி கும்பல் மீது தேர்தல் ஆணையமும், போலீசாரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சமட்டிக்குப்பத்தில் 2 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நாளை நடைபெறுவது குறித்து “மைக்” மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் வசிக்கும் பகுதியில் பிரசாரம் செய்து அவர்கள் ஜனநாயக கடமையாற்ற உதவ வேண்டும். மேலும், அந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசாரை நிறுத்தி மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP