நெய்வேலி சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் வேல்முருகளை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக்கூட்டம்

சனி, 2 ஏப்ரல், 2011

நெய்வேலி:
 
           நெய்வேலி புதுநகர் 17-வது வட்டம் மத்திய பேருந்து நிலையம் அண்ணா திடலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் நெய்வேலி சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் வேல்முருகளை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் கோபாலன் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் புகழேந்தி, பா.ம.க. நகர செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது: 
 
                இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வேல்முருகன் கட்சி பாகுபாடின்றி உழைக்கக்கூடியவர். கொள்கையில் தீவிர பிடிப்புள்ளவர். ஆனால், எதிரணியில் உள்ள ஜெயலலிதாவுக்கோ கொள்கையும் கிடையாது. கொள்கைக் கூட்டணியும் கிடையாது. கலைஞரைப்பற்றியும், அவர் தம் குடும்பத்தினரைப்பற்றியும் குறை கூறுவதைத்தவிர வேறேந்த கொள்கையும் கிடையாது.

             6-வது முறையாக கலைஞரை முதல்வராக்க நிச்சயம் முடியும். நான் செல்லும் இடங்களிலெல்லாம் கலைஞர் தான் மீண்டும் முதல்வராக வேண்டும் என ஏழை-எளியோர், பொது மக்கள் கூறுகின்றனர். எனவே கலைஞர் ஆட்சி மீண்டும் தொடர தம்பி வேல்முருகனுக்கு மாம்பழம் சின்னத்தில் முத்திரையிட்டு வெற்றிக்கனியை தாருங்கள். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

              கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொ.மு.ச. நிர்வாகிகள் பெருமாள், திலகர், மோனிகா, சுப்ரமணியன், கடலூர் எம்.பி.,கே.எஸ்.அழகிரி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், துரை.சந்திரசேகரன், டாக்டர் கோவிந்தராஜ், ராசவன்னியன், சிவந்தான் செட்டி, மூ.மு.சங்க நிர்வாகிகள் முருகேசன், ஐ.என்.டி.யூ.சி.யைச்சேர்ந்த சுந்தரமூர்த்தி, ரவிக்குமார், தி.க. நகர செயலாளர் அதியமான் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.கட்சி நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், முன்னாள் வன்னியர் சங்க செயலாளர் ஜோதிலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP