நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் வேல்முருகன் இறுதிகட்ட பிரச்சாரம்

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

நெய்வேலி:



          நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் வேல்முருகன் நேற்று என்.எல்.சி. மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து விட்டு திறந்த வேனில் சென்று வாக்கு சேகரிக்க தொடங்கினார். 16, 17, 24, 25, 18, 26, 27 ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். 

அப்போது  பா.ம.க. வேட்பாளர்  வேல்முருகன் கூறியது:- 

 

           என்.எல்.சி.யில் வேலைபார்க்கும் ஒப்பந்த மற்றும் நிரந்தரத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்காக பலமுறை சட்டமன்றத்தில், முதல்வர் கருணாநிதியிடம் பேசினேன். இனியும், குறிப்பாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம், சொசைட்டி தொழிலாளர்களின், ஹவுசிகோஸ் தொழிலாளர்களின் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை உரிமைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன்.  மேலும் 21, 29 ஆகிய வட்டங்களில் வசிக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் நலனுக்காக நிரந்தர தீர்வு ஏற்பட என்.எல்.சி. நிர்வாகத்திடம் பேசி சுமூக தீர்வுக்காக பாடுபடுவேன்.  இவ்வாறு வேல்முருகன் கூறினார்.



              வாக்கு சேகரிப்பின்போது நகர தி.மு.க. செயலாளர் புகழேந்தி, நகர அவைத்தலைவர் சிவந்தான் செட்டி, தொ.மு.ச., பா.ம.க. தலைமை நிர்வாகிகளான கோபாலன், திலகர், மோனிகா, வீர.ராமச்சந்திரன், பெருமாள், ரகுராமன், காத்தவராயன், சுப்ரமணியன், முன்னாள் தொ.மு.ச. செயலாளர் ராசவன்னியன், பா.ம.க. நகர செயலாளர் சக்கரவர்த்தி, மூ.மு. தொழிற்சங்க நிர்வாகிகள் முருகேசன், செல்வகுமார், தொ.மு.ச. துணை தலைவர் பரமகு, ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் கலைச்செல்வன், அப்துல் மஜீத் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP