நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் தி.வேல்முருகன் நெய்வேலி புதுநகர் பகுதிகளில் சூறாவளி தேர்தல் பிரச்சாரம்

புதன், 6 ஏப்ரல், 2011

நெய்வேலி:
             நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வேல்முருகன் நெய்வேலி புதுநகர் பகுதிகளில் சூறாவளி தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 
 
            நேற்று நெய்வேலி புதுநகருக்கு வடக்கே அமைந்துள்ள சிலோன் குவாட்டர்ஸ் (இலங்கை குடியிருப்பு பகுதிகளில்) வாக்கு சேகரிப்பை தொடங்கினார். திறந்த வேனில் கூட்டணி கட்சியான தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைமை நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் புகழேந்தி, பா.ம.க. நகர செயலாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், துணை தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனார்.

பின்னர் வேல்முருகன்  கூறியது:-

             நெய்வேலி 1-வது வட்டம், 7-வது வட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். காலத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்த வீடுகள் தற்சமயம் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு மழை காலங்களில் வீடு முழுவதும் பாதிக்கப்படுவதாகவும், சரியான வடிகால் வசதி இல்லாமல் உள்ளது எனவும் இங்குள்ள மக்கள் என்னிடம் கூறியுள்ளனர். இவர்களின் அத்தியாவசிய இந்த 2 கோரிக்கைகளையும் மனதில் வைத்து, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் முதல் நடவடிக்கையாக இலங்கை குடியிருப்பு வாசிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, என்.எல்.சி. நிறுவனம் மற்றும் தமிழக முதல்வரிடம் முறையிட்டு நிவாரணம் பெற வழிவகை செய்வேன்.  இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP