கத்தி திரைப்படத்திலும், விளம்பரத்திலும் லைக்கா புரொடக்ட்ஷன் பெயரை நீக்க கருணாமூர்த்தி உறுதி மொழி கடிதம் - தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் கத்தி திரைப்படத்தை வெளியிட அனுமதி
செவ்வாய், 21 அக்டோபர், 2014
சென்னையில் இன்று (21.10.2014) மாலை தமிழர் வாழ்வுரிமைக்
கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கத்தி
திரைப்படத்திலும் விளம்பரத்திலும் லைக்கா புரடொக்ஷன்ஸ் பெயரை நீக்க
உறுதியளித்து அந்நிறுவனத்தின் கருணாமூர்த்தி உறுதி அளித்த கடிதம்
குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்கள் முன்னிலையில்
லைக்காவின் உறுதி மொழி கடிதம், தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில்
இடம்பெற்றுள்ள தலைவர்களிடம் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின்
ஒருங்கிணைப்பாளர் தி. வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி :
லைக்கா நிறுவனம் தமது பெயரை படத்திலும்
விளம்பரங்களிலும் பெயரை நீக்க உறுதி அளித்துள்ளது. கத்தி திரைப்படம் நாளை
வெளியாகி அதன் முதல் காட்சியில் லைக்கா நிறுவனத்தின் பெயர்
நீக்கப்பட்டுள்ளதா என கண்காணிப்போம். எங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டபடி
லைக்கா பெயர் நீக்கப்பட்டிருந்தால் எங்களது போராட்டத்தை நிறுத்துவோம்.
அனைத்து திரைப்பட சங்கங்களும் எதிர்காலத்தில் லைக்கா நிறுவனத்துடன் எந்த
ஒரு வர்த்தக உறவை வைத்துக் கொள்ளமாட்டோம் என்றும் எங்களுக்கு உறுதி
அளித்துள்ளன. லைக்கா நிறுவனத்துடன் வர்த்தக உறவு வைக்கமாட்டோம் என அனைத்து
திரைப்பட சங்கங்களும் உறுதியளித்துள்ளன என்றார் வேல்முருகன்.
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பிடம் இன்று மாலை (அக்.21, 2014) லைக்கா
நிறுவனம் செய்தியாளர்கள் முன்னிலையில் அளித்த உறுதி மொழி கடிதம்:
0 கருத்துகள்:
கருத்துரையிடுக