முல்லைப் பெரியாறு பிரச்சனையை கண்டித்து கடலூரில் மிகப்பெரிய போராட்டம்: பண்ருட்டி தி.வேல்முருகன்
புதன், 7 டிசம்பர், 2011
கடலூர்:
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பண்ருட்டி முன்னாள் எம்.எம்.ஏ. வேல்முருகன் கூறினார்.
கடலூரில் திங்கள்கிழமை பண்ருட்டி முன்னாள் எம்.எம்.ஏ. வேல்முருகன் கூறியது:
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை கேரள அரசு நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக அனைத்துக் கட்சியினரையும் தமிழக முதல்வர் அழைத்துப் பேசி, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக கடலூரில் அனைத்துக் கட்சி மற்றும் அனைத்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் சந்தித்துப் பேசி, இளைஞர்களைத் திரட்டி கடலூரில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவேன்.
கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது கண்டனத்துக்கு உரியது. கேரள மாநிலம் பத்மநாபசுவாமி கோயில் நகைகள் முழுவதும் தமிழகத்தின் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் பல்லவ மன்னர்களால் பாதுகாப்பு கருதி அங்கு வைக்கப்பட்டவை. அதில் நான்கில் மூன்று பங்கு தமிழகத்துக்குச் சொந்தமானது. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசு மூலம் அந்த நகைகளைப் பெறவேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக