பண்ருட்டி தி.வேல்முருகனின் விழுப்புரம் மாவட்ட ஆதரவாளர்கள் பா.ம.க.வில் இருந்து நீக்கம்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

          பா.ம.க.வில் 2ம் கட்ட தலைவர்களில் ஒருவராக பண்ருட்டி முன்னாள் எம்.எல்.ஏ. தி. வேல்முருகன்   பா.ம.க.வில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து பாமகவில் இருந்து நீக்கப்பட்ட மற்றும் விலகியவர்களை சந்தித்து புதிய கட்சி தொடங்குவது குறித்து வேல்முருகன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
           இந்த நிலையில் வேல்முருகன் ஆதரவாளர்கள் கண்டுபிடித்து கட்சியில் இருந்து நீக்கும் பணியை நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது.

           அதன்படி, விழுப்புரம் மாவட்ட முன்னாள் பாமக செயலாளர் ரவி அலெக்ஸ், அவரது தம்பியும் விழுப்புரம் மாவட்ட முன்னாள் இளைஞர் அணி செயலாளர் குமரன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நேற்று முன் தினம் நீக்கப்பட்டனர்.

          இதேபோல், கோலியனூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் ஆலாத்தூர் பாலமுருகனும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் வேல்முருகனுக்கு ஆதரவாளர்கள் இல்லை என்று பாமகவினர் கூறி வந்த நிலையில் முன்னாள் மாவட்ட செயலாளர் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP