நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அ.தி.மு.க.வெற்றி பெற்று தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் பிரதமராக கடுமையாக உழைக்க வேண்டும் - சேலத்தில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 3–ம் ஆண்டு தொடக்க விழா மாநாட்டில் தி.வேல்முருகன் பேச்சு

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் 3–ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தமிழர் வாழ்வுரிமை மாநாடு சேலம் போஸ் மைதானத்தில் நேற்று 23.02.2014 மாலை நடந்தது.

தொடக்க விழா மாநாட்டிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில பொதுச்செயலாளருமான வை.காவேரி தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில அமைப்பு செயலாளரும், மே.ப.காமராஜ் வரவேற்றார். இணை பொது செயலாளர் சண்முகம், தலைமை நிலைய செயலாளர் கனல்கண்ணன், கொள்கை பரப்பு துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் சம்பத், சேலம் மாநகர தலைவர் பாலு, செயலாளர் வெங்கடேஷ், மாநில பொருளாளர் சத்தியமூர்த்தி, மாநில பொறுப்பாளர் ஜெயமோகன், முத்து, வீராசாமி, செல்வராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் சிறப்புரையாற்றி பேசியது:

இந்த மாநாடு தேர்தலுக்காக நடத்தவில்லை. அப்படி நடத்தினால் சேலம் மாநகரம் தாங்காது. தமிழ் சமூகத்திற்காக தான் இந்த மாநாடு நடக்கிறது. பேரறிவாளன், சாந்தன், முருகன் 3பேரின் விடுதலை குறித்து அரசு முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளும், நானும் தமிழக முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா 7பேரை விடுதலை செய்து அறிவித்தார். மேலும் மத்திய அரசை எதிர்த்து துணிந்து நின்று 3நாட்களில் விடுதலை என்பதையும் அறிவித்தார். இது இந்திய வரலாற்றிலேயே சிறப்பு வாய்ந்ததாகும். வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழக முதல்– அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணிக்கு நாங்கள் முழுமையான ஆதரவு அளிக்கிறோம். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைப்போம். சிலர் கூட்டணிக்காக இன்னமும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சீட்டுக்காகவோ, நோட்டுக்காகவோ அ.தி.மு.கவுக்கு செல்லவில்லை.

இந்த மாநாட்டில் திரண்டுள்ள லட்சக் கணக்கான தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் , நிர்வாகிகள் முன்னிலையில் பிறந்த நாள் காணும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்ற வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று 3–வது அணிக்கு தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையேற்று பிரதமராக வேண்டும்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. மேட்டூர் அணையில் இருந்து மழைக்காலங்களில் வீணாகும் மழைநீரை சேலத்தை சுற்றி உள்ள மாவட்டங்களில் இருக்கும் குளம் மற்றும் ஏரிகளில் தேக்கி வைத்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டம் வகுத்திட தமிழக அரசை கேட்டு கொள்கிறோம்.

2. சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நாமக்கல் வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டுமெனவும்.

3. சேலம்–சென்னை விழுப்புரம் வழியாக செல்லும் ரெயிலை மேட்டூர் வரைக்கும் நீட்டிக்க வேண்டுமெனவும் மத்திய அரசை கேட்டு கொள்வது என்பது உள்பட 21 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
 






 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP