இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் சுப்பிரமணியசாமி சந்திப்பிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்
வெள்ளி, 25 ஜூலை, 2014
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை:
"பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியசாமி தலைமையில் 5 பேர் கொண்ட குழு
ஒன்று இலங்கை சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே சந்தித்து பேசியுள்ளது.
இந்த சந்திப்பின்போது இலங்கையுடன் நல்லுறவையே இந்திய பிரதமர் நரேந்திரமோடி
விரும்புகிறார் என்றும், தமிழக குரல்கள் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்
என்றும் ராஜபக்சேவிடம் சுப்பிரமணிய சாமி கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சுப்பிரமணியசாமி தலைமையிலான குழு தன்னிச்சையாக சென்றதா? அல்லது பா.ஜனதா கட்சியே அனுப்பி வைத்ததா? அல்லது மத்திய மோடி அரசு அனுப்பி வைத்ததா? என்ற கேள்விகளுக்கு விடை எதுவும் இல்லை. இந்திய அரசின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு குறித்து பேச சுப்பிரமணியசாமி யார்? அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? மத்திய அரசு இந்த விவகாரத்தில் இன்னமும் மௌனமாக இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்தியாவில் கடல் ஆராய்ச்சி மையங்களை நிறுவுவது தொடர்பாக சுப்பிரமணியசாமியிடம் இந்திய ஜனாதிபதி பேசுவதற்கு அவர் என்ன இந்திய அரசின் பிரதிநிதியா? இலங்கை சென்ற சுப்பிரமணியசாமி குழு பற்றி மோடி அரசின் கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் இந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தமிழக பா.ஜனதா கட்சி ஆகியவை கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? இது பச்சை தமிழின துரோகம் அல்லவா?’’

0 கருத்துகள்:
கருத்துரையிடுக