மத்திய தேர்வாணையத் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த வலியுறுத்தி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தை முற்றுகையிடும் போராட்டம்
வியாழன், 17 ஜூலை, 2014
மத்திய அரசு துறைகளில் ஏற்படும் காலி பணியிடங்கள் மத்திய அரசு பணியாளர்
தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி
மொழியில் மட்டுமே நடைபெறுகிறது. இதனால் பிற மொழி இனத்தவர்கள் தேர்வு
எழுதுவதில் சிரமம் ஏற்படுகிறது. 2006–2012
ஆண்டுகளுக்கு இடையே நடந்த தேர்வில் 493 காலி இடங்களுக்கு தேர்வு
செய்யப்பட்ட 478 பேர் வடமாநிலத்தவர்கள். 15 பேர் மட்டுமே தென்மாநிலத்தை
சேர்ந்தவர்கள். ஒன்று, இரண்டு பேர்தான் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தேர்வு
பெற்றனர். மத்திய தேர்வாணையத் தேர்வுகளை மாநில அளவில் நடத்த வேண்டும்.
தேவையானால் அதற்கு இசைய அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும். ஆங்கிலத்தோடு
அந்தந்த மாநில மொழிகளிலும் வினாத்தாள்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை
வலியுறுத்தி இன்று 17.07.2014 (வியாழக்கிழமை) சென்னை நுங்கம்பாக்கம்
டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தை மத்திய
அரசுப் பணிகளில் தமிழர் வேலைவாய்ப்பு பறிப்புக்கு எதிராக கூட்டியக்கம்
சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
முற்றுகை
போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி
தி.வேல்முருகன், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழக
வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வேணுகோபால்,
செந்தில்குமார், மனித நேய மக்கள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம்
கரு.அண்ணாமலை, மே 17 இயக்கம், இளம் தமிழகம் இயக்கம், தமிழ்நாடு மக்கள்
கட்சி நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது
செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக