தானே புயல் : நிவாரண பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதத்தை கண்டித்து உண்ணாவிரதம் - பண்ருட்டி தி.வேல்முருகன்
செவ்வாய், 3 ஜனவரி, 2012
பண்ருட்டி:
முன்னாள் பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் பண்ருட்டி தி.வேல்முருகன் பண்ருட்டியில் அளித்த பேட்டி:
“தானே” புயலால் கடலூர் மாவட்டத்தில் குடிநீர், பால், உணவு, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். புயல் பாதித்த பகுதிகளை மத்திய அரசின் பிரநிதிகள் மற்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை.இ து வேதனையை அளிக்கிறது.
புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக இருந்து வருகிறது. கடந்த 30-ந் தேதியில் இருந்து புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு வருகிறேன். யாருக்கும் அரசு உதவி கிடைத்ததாக தெரியவில்லை. பிற மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளை வரவழைத்து கடலூர் மாவட்டத்தில் புனரமைப்பு பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
என்.எல்.சி. போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அரிசி, பால், குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 10 ஆயிரம் லாரிகளில் குடிநீரை அரசு கொண்டு சென்றது. ஆனால் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு தேவையான குடிநீரை வினியோகிக்காதது வேதனை அளிக்கிறது. இதில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல் நிவாரண பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதத்தை கண்டித்தும், உடனே அந்த பணிகளை செயல்படுத்த வலியுறுத்தியும் நாளை ( புதன் கிழமை - 04/01/2012) உண்ணாவிரதம் நடைபெறும். இந்த உண்ணாவிரத போராட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடத்தப்படும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக