தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவரி, வீட்டுவரி, மின்கட்டணத்தை 15 ஆண்டுகளுக்கு தள்ளுபடி செய்யக் கோரி பண்ருட்டி தி.வேல்முருகன் மனு
சனி, 7 ஜனவரி, 2012
நெய்வேலி:
"தானே" புயலால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரண உதவியாகமாதந்தோறும் ரூ.5 ஆயிரத்தை ஒராண்டு காலத்துக்கு வழங்க வேண்டும் என முன்னாள் பண்ருட்டி எம்.எல்.ஏ., தி. வேல்முருகன் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
"தானே" புயலால் சேதமடைந்த பகுதி மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் வழங்கவில்லை என்று கூறி அதைக் கண்டிக்கும் விதமாக முன்னாள் பண்ருட்டி எம்.எல்.ஏ., தி. வேல்முருகன் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நெய்வேலி ஸ்கியூபாலம் அருகே தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். வெள்ளிக்கிழமை தனது போராட்டதை நிறைவுசெய்த முன்னாள் பண்ருட்டி எம்.எல்.ஏ., தி. வேல்முருகன் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
முன்னாள் பண்ருட்டி எம்.எல்.ஏ., தி. வேல்முருகன் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனுவில் கூறியிருப்பது:
- புயலால் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ. 5 லட்சமும்,
- பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 3 ஜோடி துணிகளும் வழங்க வேண்டும்.
- குடும்பம் நடத்த ஏதுவாக, தாற்காலிக குடியிருப்பு அமைத்துத் தர வேண்டும்.
- ஓராண்டு காலத்துக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும்.
- விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி வழங்க வேண்டும்.
- நிலவரி, வீட்டுவரி, மின்கட்டணம் உள்ளிட்டவைகளை 15 ஆண்டுகளுக்கு தள்ளுபடி செய்யவேண்டும்.
- கான்கிரீட் வீடு, கிராமங்கள் தோறும் சேட்டிலைட் தகவல் மையங்கள் அமைக்கவேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அந்த மனுவில் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக