தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,000 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள்: முதல்வருக்கு பண்ருட்டி தி.வேல்முருகன் பாராட்டு

செவ்வாய், 31 ஜனவரி, 2012

பண்ருட்டி:

     தானே புயலில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் ரூ.1,000 கோடியில் கட்டப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்குப் பாராட்டு தெரிவிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் கூறினார்.

 ண்ருட்டியில் திங்கள்கிழமை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் கூறியது:

           புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதன் அடிப்படையில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என அறிவித்த முதல்வரை பாராட்டி வரவேற்கிறேன். விவசாயிகளுக்கு முந்திரி, பலா கன்றுகளை தந்து, ஒரு ஆண்டுக்கு பராமரிப்பு செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறேன்.  

          புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் விவசாய, கூட்டுறவு, தேசிய வங்கிக் கடன்கள் ரத்து செய்யப்படும் என அறிவித்து, அவர்களது வயிற்றில் பால் வார்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். 

கல்விக் கட்டணம்: 

           5 ஆயிரம் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என கடலூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர்கள் இயக்கம் சார்பில் முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களின் நியாயமான இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளில் கட்டணத்தை கட்டியாக வேண்டும் என நிர்பந்திப்பதாக புகார்கள் வந்துள்ளது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

          புயல் நிவாரணம் அளிப்பதற்காக, நெய்வேலியில் உள்ள குளுனி பள்ளி நிர்வாகம், மாணவர்களிடம் ரூ.500 முதல் ஆயிரம் வரை கட்டாய வசூல் செய்து வருகிறது. இயலாத மாணவர்களை வகுப்பறையில் சேர்க்க மறுக்கின்றனர். இக்கல்வி நிறுவனத்தின் மீது அரசும், கல்வித் துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வசூலித்த பணத்தை திரும்பத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.வேல்முருகன் கூறினார்

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்ச்சி - புகைப்படங்கள்

வெள்ளி, 27 ஜனவரி, 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும், தமிழ் உரிமைகூட்டமைப்பு சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு 25-01-2012 சென்னையில் முன்னெடுக்கப்பட்ட வீரவணக்க நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன், பேராசிரியர் தீரன், மற்றும் ஓவியர் வீரசந்தானம்  கலந்துகொண்ட நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.




























Read more...

கடலூரை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மறியல் போராட்டம் - பண்ருட்டி தி.வேல்முருகன்

புதன், 25 ஜனவரி, 2012

கடலூர் : 

        "கடலூரை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தமிழக  வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும்'' என தமிழக  வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி. வேல்முருகன் கூறியுள்ளார்.
    
கடலூரில்
மிழக  வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி. வேல்முருகன் கூறியது :

         தானே' புயலுக்காக மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக 500 கோடி ரூபாயை மட்டும் வழங்கியுள்ளது. மின்வாரிய சீரமைப்பு பணிக்கே 2,000 கோடி ரூபாய் ஆகும். அனைத்துத் துறை அதிகாரிகளைக் கொண்டு கள ஆய்வு செய்து ஒட்டு மொத்த சேதத்தை கணக்கிட வேண்டும். ஆளும் கட்சியினர் சாலையோரங்களில் விழுந்த மரங்களை வெட்டுவது, புயலில் சேதமடைந்த அரசு கட்டடங்களை இடித்து அகற்றும் டெண்டர் எடுப்பதிலுமே குறியாக உள்ளனர்.

        மத்திய அரசு, கடலூர் மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவித்து பேரிடர் மையம் துவங்க வேண்டும். விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி விரைவில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப்படும். கட்சி மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்து வரும் 29ம் தேதி தர்மபுரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

Read more...

தானே புயல் நிவாரணம் 10 ஆயிரம் கோடி வழங்கக்கோரி போராட்டம் : தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன்

செவ்வாய், 24 ஜனவரி, 2012

தானே புயல் நிவாரணம் 10 ஆயிரம் கோடி வழங்கக்கோரி போராட்டம் : தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன்  அறிவிப்பு

தி ஹிண்டு



தினமணி 
 

இந்தியன் எக்ஸ்பிரஸ் 



தினத்தந்தி

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முதல் கொடியேற்று விழா

கடலூர்:

         முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி.வேல்முருகன் புதிதாகத் தொடங்கி இருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்  முதல் கொடியேற்று விழா, கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

         முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி.வேல்முருகன் பொங்கல் பண்டிகை தை முதல் நாள் (15-01-2012) அன்று, "தமிழக வாழ்வுரிமைக் கட்சி' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி இருக்கிறார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முதல் கொடியேற்று விழா கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 

         செம்மண்டலம், புதுப்பாளையம், மஞ்சக்குப்பம், சூரப்பநாயக்கன்சாவடி உள்ளிட்ட 13 இடங்களில் கொடியேற்று விழா நடந்தது. விழாக்களுக்கு, மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். நகரச் செயலர் த.ஆனந்த் கொடி ஏற்றினார். மாவட்ட நிர்வாகிகள் கமலநாதன், ராதாகிருஷ்ணன், பொறியாளர் கண்ணன், பாலு, அருள்பாபு, நகராட்சி உறுப்பினர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more...

பண்ருட்டி தி.வேல்முருகனின் இளமைக்கால நினைவுகள்

திங்கள், 23 ஜனவரி, 2012

     
      ஆனந்த விகடன் இதழின் இணைப்பாக வெளிவரும், என் விகடன் இதழில் "தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இளம்புயல் பாசறை நிறுவனருமான முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பாரதஜோதி இளம் புயல் திரு.வேல்முருகன்  பற்றியும், இளம்புயலின் சொந்த ஊரான புலியூர் காட்டுசாகை  கிராமத்தை பற்றியும் அதன் இயற்கை வளம் பற்றியும் திரு.வேல்முருகனின்   இளமை காலம் பற்றியும் வெளியிடப்பட்டிருக்கும் என் ஊர் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரை.







Read more...

Panruti T.Velmurugan asked paid tributes for Tamil Ayyappa devotee D.Santhavelu

வெள்ளி, 20 ஜனவரி, 2012



CHENNAI: 

         The body of 39- year-old Tamil Ayyappa devotee, D Santhavelu, who succumbed to burns at the Kilpauk medical college hospital here on Sunday, after being scalded by boiling water at Pamba in Kerala, was forcibly taken away from his residence by officials with the assistance of the police and cremated at Ambattur on Wednesday. Relatives of the victim refused to accompany the body.

         Santhavelu, a plumber from Thiruverkadu, was part of an 80-member group that left for Sabarimala on January 6. Demanding a thorough probe into the incident that led to Santhavelu’s death, his family members refused to perform the last rites. Tension began building up in the area on Wednesday morning, when activists of a few outfits gathered at his house in large numbers. Former Panruti MLA T.Velmurugan and Naam Thamizhar Iyakkam president Seeman paid tributes to the body.
 
        JCP (North) N K Senthamaraikannan said the revenue divisional officer (RDO) of Ponneri received a complaint that the body was being kept for three or four days at the house. “The revenue officials sought our assistance in removing the body,” a police official said. The JCP said the revenue officials requested people assembled there to cooperate, but they said they would not allow the body to be removed till their demands were met.
 
      “That is not our problem. It is for the two governments to decide,” he said. The revenue officials led by RDO and a large police team, led by Senthamaraikannan, removed the body and carried it to the Ambattur cremation ground. “The RDO asked the family members to accompany the body, but they refused,” the officer said. “The cremation took place around 5.30 pm,” he added. Velmurugan and around 100 protestors were arrested and later released. The Kerala Chief Minister’s office had on Tuesday said that Santhavelu suffered burns when boiling water fell on him as a firestone (choolah) gave in at a shop while he was trying to dry currency notes on January 9.

Read more...

தமிழ்ச் சமுதாயத்திற்கு நன்மை செய்பவர்களுடன் கூட்டணி - பண்ருட்டி தி.வேல்முருகன்

 நன்றி : ஞானசேகர்
    முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன், "தமிழக வாழ்வுரிமை கட்சி' என்ற புதிய கட்சியை துவக்கியிருக்கிறார். இக்கட்சியின் நிறுவனராக வேல்முருகனும், தலைவராக பேராசிரியர் தீரனும், மற்ற மாநில பொறுப்புகளில் பா.ம.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், வேல்முருகனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

* தமிழக வாழ்வுரிமை கட்சியின் நோக்கம் என எதை முன்னிறுத்துகிறீகள்?

        தமிழக மக்களின் தன்மானம், இனமானம், மொழி உரிமை, வாழ்வுரிமை உள்ளிட்ட கூறுகளில் தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனைப் பேணி காக்கவும், தன்னலம் நீக்கி தமிழர் களின் நலன் காக்கவும் உருவாக்கப்பட்டி ருப்பதுதான் தமிழக வாழ்வுரிமை கட்சி. தமிழகத்திலே தமிழர்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டவே இந்த பெயரை தேர்வு செய்தோம். இது தவிர, சாதி, மதம், மொழி, பொருளாதாரம் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் பிரிந்து கிடக்கின்ற... தன்மானம்- சுய மரியாதை இழந்து தவிக்கின்ற... மக்களை அணி சேர்த்து அவர்களை போர்க்குணம் மிக்கவர்களாக வார்த்தெடுப்பதே எங்கள் கட்சியின் அடிப்படை நோக்கம்.

* பா.ம.க.விலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் நீக்கப்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரன், தீரன், பு.தா.இளங்கோவன் உள்ளிட்ட பலர், புதிய கட்சி துவங்கி நடத்தியதும் பிறகு கட்சியை கலைத்துவிட்டு வேறு ஒரு கட்சியில் இணைந்ததும் நடந்திருக்கிறது. அந்த வரிசையில் நீங்களும் இணைந்துவிடுவீர்கள் என்கிறார்களே?

         வன்னியர் சங்கம் தொடங்கி பா.ம.க.உருவாக்கப் பட்டது வரை... கடந்த 27 ஆண்டு காலமாக பொது வாழ்க் கையில் இருக்கிறேன். நீங்கள் கூறிய தலைவர்களை பா.ம.க.விலிருந்து நீக்க டாக்டர் ராமதாஸ் முடிவெடுத்த போது, "அவர்களை நீக்கக்கூடாது, நீக்கினால் பா.ம.க. பலகீனப்படும்' என்று சொல்லி நீக்கத்தை எதிர்த்தவன் நான். ஆனால் நீக்கத்திற்கு எதிர்வினை இருப்பதைப் பற்றி ஆலோசிக்காமல், எடுத்த முடிவை செயல்படுத்தினார் ராமதாஸ். ஆனால் சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பொருளாதார ரீதியாக வலிமையும் பா.ம.க. பெற்றிருந்ததால் பலர் நீக்கப்பட்ட பிறகும் அக்கட்சி பலகீனமாகவில்லை. அதனால் ராமதாஸை எதிர்த்து கட்சி ஆரம்பித்தவர்கள் அதனை கலைத்துவிட்டோ அல்லது வேறு ஒரு கட்சியில் இணைந்தோ தங்களின் பொதுவாழ்க்கையை தொடரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.

      ஆனால் இந்த வேல்முருகன் அப்படி அல்ல. பா.ம.க. தலைமையால் "போகக்கூடாது.... கலந்துகொள்ளக் கூடாது' என்று கட்டளையிடப் பட்ட நிலையிலும் தமிழக தமிழர் களுக்காகவும் ஈழத்தமிழர்களுக் காகவும் பல்வேறு தளங்களில் நின்று அவர்களின் உரிமைகளுக்காக வீதியில் இறங்கிப் போராடி யிருக்கிறேன். கொடி பிடித்திருக்கிறேன். கோஷம் போட்டிருக்கிறேன். அதனால்தான் தமிழக மக்களிடம் எனக்கு ஏகோபித்த ஆதரவு பல்கி பெருகியிருக்கிறது. ஆக... அவர்களது வரிசையில் நானும் இணைவேன் என்பது தவறான கண்ணோட்டம்.

* திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை என்கிற அதிரடி முடிவை எடுத்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உங்களின் அரசியல் நிலைப்பாடு என்ன?


        "திராவிட கட்சிகளிடத்தில் கூட்டணி இல்லை' என்கிற ராமதாஸ், தேசிய கட்சிகளைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை? ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசுக்கு துணைபோன காங்கிரஸ் கட்சியுடன் எதிர்காலத்தில் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டிய முடிவை எடுப்பதற்காகத் தான் தேசிய கட்சியை லாவகமாக தவிர்த்து விட்டார். அதனால் அவரது அரசியல் நிலைப் பாடெல்லாம் உறுதியானது அல்ல. ஆனால் எங்களுடைய நிலைப்பாடு எப்போதும் உறுதி யானதாகவே இருக்கும். தமிழ்ச் சமுதாயத்திற்கு யார் நன்மை செய்திருக்கிறார்களோ... அல்லது நன்மை செய்வார்கள் என நம்பிக்கை இருக் கிறதோ அவர்களுடன் கூட்டணி உறவுகள் எங்களுக்கு ஏற்படலாம். ஆனால்... இப்போது தான் நாங்கள் புதிய கட்சியை துவக்கியிருக்கிறோம். அதனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அப்போதைய அரசியல் சூழல்களுக்கேற்ப எங்களின் அரசியல் நிலைப்பாடு வகுக்கப் படும். அதுதான் எங்களின் தொடர்ச்சியான அரசியல் நிலைப்பாடாகவும் எதிரொலிக்கும்.

* தமிழகத்திலுள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் உங்கள் கட்சிக்கான இடம் அரசியல் தளத்தில் எங்கே இருக்கிறது?

           வட தமிழகத்தில் பா.ம.க. வலிமையாக இருக்கிறது என்கிறார்கள். இது உண்மை கிடையாது. உருவாக்கப்பட்ட மாயை அது. வட தமிழகத்தில் பா.ம.க.வை வார்த்தெடுத்த, வளர்த்தெடுத்த பெருமை... அக்கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அணித் தலைவர்கள், ஒன்றிய-கிளைக்கழக நிர்வாகிகள் என பல பேருக்கு உண்டு. அவர்கள் எல்லோரும் இப்போதைக்கு எங்கள் கட்சியில்தான் இருக்கிறார்கள். அதனால் பா.ம.க.வின் வாக்கு வலிமை அத்தனை யும் "தமிழக வாழ் வுரிமை கட்சி'க்கு இடம் பெயர்ந்து விட்டது. இது ஒரு புறமிருக்க, இருக்கிற கட்சிகளிடத் தில் எல்லாம் நம்பிக்கை இழந்து, தமிழகத்தில் ஒரு புதிய மாற்று கட்சி உருவாகாதா என சிந்திக்கின்ற இளைஞர்கள், மாணவர்கள் மட்டும் 30 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அந்த சிந்திக்கிற சமுதாயம் எங்களை ஆதரித்து நிற்பதால் அதுவும் எங்களுக்கான அரசியல் இடமாக இருக்கிறது.



* சமூக நீதி, மது ஒழிப்பு, சினிமா மோகம் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கியமான அரசியல் கொள்கைகளை பா.ம.க. வைத்திருக்கிறது. மற்ற திராவிட கட்சிகளும் ஆரோக்கியமான கோட்பாடுகளை கொண்டிருக் கின்றன. அந்த வகையில் அக்கட்சிகளின் கொள்கையின் நீட்சியாக உங்கள் கொள்கைகள் இருக்குமா? அல்லது ஏதேனும் புதிய கொள்கைகளை வகுத்துள்ளீர்களா?

           பா.ம.க.வின் கொள்கைகளை வகுத்தவர் பேராசிரியர் தீரன். அவர், தற்போது எங்கள் கட்சியின் தலைவர். இந்த சூழலில், எங்கள் கட்சிக்கான புதிய கொள்கைகள் விவாதிக்கப்பட்டு உரு வாக்கப்பட்டு வருகிறது. கடலூரில் நடக்க விருக்கும் முதல் மாநில மாநாட்டில் அதனை அறிவிக்கவிருக்கிறோம். அப் போது எங்களின் அரசியல் கொள்கை களைப் பார்த்து அத்தனை அரசியல் கட்சிகளும் வியந்துபோகும்.

Read more...

Panruti T.Velmurugan has floated Tamilaga Vazhvurimai Katchi

திங்கள், 16 ஜனவரி, 2012

CHENNAI: 


      Former Panruti MLA Panruti T.Velmurugan has floated Tamilaga Vazhvurimai Katchi, coinciding with the Pongal celebrations.

        Launching the party, he said it was formed on the lines of preserving self-respect, race-respect, language rights and livelihood rights of Tamils as one race. “The party has started attracting such leaders from almost all prominent communities and also marginalised ones,” he added. Prof Theeran from Naam Tamizhar joined the new party and was named party president. Bahujan Samaj Party’s national leader Nagamani also joined. Ex-MLAs Cauvery, M S Shanmugam and Kamaraj were the other leaders who joined the party. On the policies, Velmurugan said he will soon convene the first conference of the party.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொள்கைகள்


       தமிழக மக்களின் தன்மானம், இனமானம், மொழி உரிமை, வாழ்வுரிமை உள்ளிட்ட கூறுகளில் தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனைப் பேணி காக்கவும், தன்னலம் நீக்கி தமிழர்களின் நலன் காக்கவும் 
 
     சாதி, மதம், மொழி, பொருளாதாரம் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் பிரிந்து கிடக்கின்ற... தன்மானம்- சுய மரியாதை இழந்து தவிக்கின்ற... மக்களை அணி சேர்த்து அவர்களை போர்க்குணம் மிக்கவர்களாக வார்த்தெடுப்பதே தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் அடிப்படை நோக்கம்.


Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் விபரம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் விபரம்:


தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர்


பண்ருட்டி தி.வேல்முருகன்,  முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் 

கட்சித் தலைவர் 


பேராசியர் தீரன்


பொதுச் செயலாளர் 


திரு. காவேரி, முன்னாள் இடப்பாடி சட்டமன்ற உறுப்பினர்



இணைப் பொதுச் செயலாளர் 


திரு. எம்.எஸ்.சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
 
அமைப்புச் செயலாளர்



 திரு. மே.ப. காமராஜ், முன்னாள் தாரமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் 


தலைமை நிலைய செயலாளர்  


திரு. சண்முகசுந்தரம், 


மாநில மகளிரணி பாசறை செயலாளர் 


விஜயலட்சுமி 

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி துவக்கம்

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

     


         முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், இளம்புயல் பாசறை நிறுவனருமான பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று, தை முதல் நாள் 15.01.2012 ( ஞாயிற்றுக்கிழமை ) சென்னை, போரூரில் அமைந்துள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் புதிய கட்சியை துவங்கினார்.
 
          தமிழக வாழ்வுரிமைக் கட்சி என பெயர் சூட்டி, கட்சி கொடியினை அறிமுகப்படுத்தினார். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. யாருடனும் கூட்டணி வைப்போம். காலத்திற்கேற்ப இந்திய அரசியல் சட்டத்திலும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என கூறினார்.

Read more...

பண்ருட்டி தி.வேல்முருகனின் புதியக் கட்சி தொடக்க விழாவிற்கான பேனர்

சனி, 14 ஜனவரி, 2012


பண்ருட்டி தி.வேல்முருகனின் புதியக் கட்சி தொடக்க விழாவிற்கான பேனர்


Read more...

சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை உள்ளது: பண்ருட்டி தி.வேல்முருகன்


முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் அளித்த பேட்டி:

             என்னிடம் உண்மையான உழைப்பும், நேர்மையும், துணிவும், சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் உள்ளது. கட்சி நடத்த பணத்திற்காக யாரிடமும் வசூல் செய்ய மாட்டேன். என் தொண்டர்கள் மூலம் நிதி திரட்டி கட்சியை நடத்துவேன். பணம் ஒரு பிரச்னை இல்லை.

Read more...

புதியக் கட்சி தொடக்க விழாவிற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் அழைக்கிறார்

வெள்ளி, 13 ஜனவரி, 2012

      சென்னையில் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் தொடங்கப் போகும் புதியக் கட்சி தொடக்க விழாவிற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் அழைக்கிறார். 

இது  குறித்து முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், இளம் புயல் பாசறை நிறுவனருமான  பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு 

    தமிழர் திருநாளாம், தை முதல் நாள்  (15-01-12) எனது தலைமையில் துவக்கப்படும் புதிய கட்சிக்கான துவக்க  விழாவிற்கு  தமிழின உணர்வாளர்களும், மாற்று அரசியல் மீது ஆர்வம் கொண்டோரும், வருகை தந்து இந்த புதிய அரசியலுக்கான துவக்க விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறேன். 

       புதிய கட்சிக்கான துவக்க  விழாவில்  பெயர், மற்றும், கொடி, மற்றும் கொள்கைகள், ஆகியவை அறிவிக்கப்படும். 

இடம்:

கட்சி தலைமையகம்,
எண்.145, 
குன்றத்தூர் சாலை,
எம்.எஸ்.ஆர். வளாகம் ,
போரூர்,
சென்னை  
  
நேரம் :

காலை 7:30 மணி

  புதிய கட்சியின் முதல் மாநாடு :

     புதிய கட்சியின் முதல் அரசியல் மாநாடு  கடலூரில் நடைபெறும்.

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP