பாமக இணை பொதுச்செயலாளர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை
வியாழன், 23 ஜூன், 2011
பாட்டாளி மக்கள் கட்சி இணை பொதுச்செயலாளர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை
அன்பு உறவுகளுக்கு வணக்கம்,
மக்கள் ஒன்றுபடாமல் எந்தபோராட்டமும் வென்றதில்லை மிகவிரைவாக முன்னேறிகொண்டிருக்கும் இந்த அறிவியல் உலகத்தில் ஒரு இனம் தன் சொந்தமண்ணை இழந்து . தாய் மகனை இழந்து மகன் தாயை இழந்து , பெண்கள் கற்பை இழந்து முள்வேலி முகாம்களுக்குள் அடைபட்டு மானம் ஒன்றே பிரதானம் என்று வாழ்ந்த இனம் இன்று ஒரு வேளை சோற்றுக்கு சிங்களவனிடம் கையேந்தி நிற்கிறது.
அறவழி போரட்டத்தில் 35 ஆண்டுகள் போராடியும் கிடைக்காத உரிமைகள் ஆயுத போராட்டத்தின் மூலமாக பெறலாம் என்று இன விடுதலைக்கு போராடிய உன்னத தலைவனை 20க்கும் மேற்பட்ட நாடுகளின் துணையோடு வெற்றி பெற்று விட்டோம் என்று கூவி கொண்டிருக்கும் இனபடுகொலையாளன், போர்குற்றவாளி ராசபக்ச. அத்துடன் இல்லாமல் இன்றுவரை தாய் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 400 மீனவர்கள் சிறீலங்காக் கடற்படையால் கொல்லப்பட்டது ராசபக்ச மற்றும் சிறீலங்கா சிங்கள இனவாத தலைமையினால் மட்டுமே.
மேலும் நாம் இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் உலக வரலாற்றில் தமிழனுக்கு இனி இழிநிலைதான். என்று வரலாறு நம்மை பழிக்க கூடாது. அடுத்தவர் வீட்டில் துக்க நிகழ்வென்றால் நாம் அதை அந்த துக்கத்தை பகிர்வது கிடையாதா? ஒரு இனத்தையே அழித்திருக்கிறார்கள் கொல்ல பட்டவர்களின் உறவுகளுக்கு துயர் துடைக்க வேண்டாமா? அவர்களுக்கு நீதீ கிடைக்க வேண்டாமா? இதற்கு குரல் கொடுக்க தமிழனாக இருக்க வேண்டும் என்றில்லை மனிதநேயம் கொண்டவராக இருந்தால் போதும் உலக தமிழர்கள் ஒன்றிணைந்தால் தமிழனுக்கென்று ஒரு நாடு கிடைக்காதா? வெறும் 4 லட்சம் மக்கள் தொகையை கொணட ஒரு இனம் நாடு அடையும் போது 10 கோடி தமிழர்கள் சேர்ந்து தமிழீழத்தைஅடைய முடியாதா என்ன?இப்போது நடக்கும் போராட்டங்களில் உலகதமிழர்களில் 10 சதவீதம் கூட வீதியில் இறங்கி போராட வரவில்லை.
தமிழனுக்கும் தமிழுக்கும் பிரச்சனை என்று வரும்போது ஒன்றிணைந்தால் நம்மை யாராவது வீழ்த்த முடியுமா ? நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இதற்காக நாம் நிச்சயமாக ஒன்று கூடி போராடித்தான் ஆகவேண்டும். வாருங்கள் சொந்தங்களே நம் இனவிடுதலைக்காக, தமிழனுக்கென்று உலக வரைபடத்தில் ஒரு நாடு உருவாக , பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நியாயம் கிடைக்க வாருங்கள் சூன் 26 மாலை 4 மணிக்கு ஐநா சர்வதேச சித்திரவதைகளுக்கான எதிரான தினத்தில் மெரினா கடற்கரையில் மே 17 இயக்கம் நடத்தும் இந்த நிகழ்வில் குடும்பத்துடன் கலந்து கொண்டு உலகத்தை திரும்ப செய்வோம்.
தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்
அன்புடன்
தி.வேல்முருகன்
இணை பொதுசெயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
1 கருத்துகள்:
hai
கருத்துரையிடுக