நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் தி.வேல்முருகனுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி : திமுக
புதன், 1 ஜூன், 2011
பண்ருட்டி ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் ராஜாஜி சாலையில் உள்ள விடுதியில் நடந்தது. முன்னாள் எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைசெயலாளர் தென்னரசு, மாவட்ட கவுன்சிலர் ராஜா, பிரதிநிதி ஞானமணி, துணை செயலாளர் விஜயா சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 88வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். ஒவ் வொரு கிராமத்திலும் கட்சி கொடிகள் ஏற்றி இனிப்புகள் வழங்க வேண்டும். அன்னதானம், நோட்டு புத்தகங்கள், சீரு டைகளை ஏழைகளுக்கு வழங்கி சிறப்புடன் கொண்டாட வேண்டும். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சபா.ராஜேந்திரன், நெய்வேலி தொகுதி பாமக வேட்பாளர் வேல்முருகன் ஆகியோருக்கு பெருவாரியாக வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி சுமார் 1200 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள தலைமை செயலக கட்டிடத்தை மாற்றி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற கூட்டம் நடத்தும் ஜெயலலிதாவின் போக்கை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. சுமார் 200 கோடி மதிப்பில் புதியதாக அச்சடிக்கப்பட்டுள்ள சமச்சீர் பாட நூல்களை அமல்படுத்தாத முதல்வர் ஜெயலலிதாவின் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக