என்எல்சி நிறுவன நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை:புவனகிரி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் த.அறிவுச்செல்வன்

திங்கள், 28 மார்ச், 2011

சிதம்பரம்:

              நெய்வேலி 3-வது அனல் மின்நிலைய விரிவாக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரை முழுமையாக விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுப்பேன் என புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் த.அறிவுச்செல்வன் தெரிவித்தார்.  

இது குறித்து புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் த.அறிவுச்செல்வன்   தெரிவித்தது: 

                   என்னை உறுப்பினராக தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் தொகுதியின் அடிப்படை முக்கிய பிரச்னைகளை முன்னின்று செயல்படுத்துவேன்.  ÷இத்தொகுதியின் மிகப்பெரிய ஏரியாக கருதப்படும் வாலாஜா ஏரியை ஆழப்படுத்தி, தடுப்பணைகளை உயர்த்தி வீராணம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை சேமித்து 11,400 ஏக்கருக்கு மேற்பட்ட வேளாண் நிலங்கள் பாசன பெற நடவடிக்கை மேற்கொள்வேன்.  


                 ஆண்டுதோறும் பரவனாற்றில் ஏற்படும் உடைப்பினால் எல்லைக்குடி, குமுடிமூலை உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பரவனாற்றை தூர்வாரி, ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்.  சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பேன். விவசாயிகளின் விளைப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.  



                  சேத்தியாத்தோப்பை மையமாக கொண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க பாடுபடுவேன்.  தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுப்பேன். வறுமையில் வாழும் தொகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஆலோசனையையும், ஆதரவையும் பெற்று நிறைவேற்றுவேன் என த.அறிவுச்செல்வன் தெரிவித்தார்.  அரசியல் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் தேவதாஸ் படையாண்டவர், முன்னாள் மாநில இளைஞரணி துணைச் செயலர் வேல்முருகன், மாவட்ட நிர்வாகிகள் சேரலாதன், குருசேவ் ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP