கடலூர் மாவட்டத்தில் 2 தொகுதிகளில் பாமக போட்டி
புதன், 16 மார்ச், 2011
திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் நேற்று முடிவு செய்யப்பட்டன. திமுக - பாமக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியும், பாமக நிறுவனர் ராமதாசும் உடன்பாட்டில் கையெழுத்தும் இட்டனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க கட்சி போட்டியிடும் 30 தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நெய்வேலி, மற்றும் புவனகிரி சட்டமன்றத் தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நெய்வேலி தொகுதியில் எம்.எல்.ஏ.தி. வேல்முருகன் வேட்பாளராகவும் புவனகிரி தொகுதியில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த திரு. அறிவுசெல்வன் அல்லது திரு.தேவதாஸ் படையாட்சியார் அல்லது திரு.பேராசரியர் திருநாவுகரசு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக