ஐ.நா.சபையில் ராஜபக்சே பேசுவதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தமிழ் உணர்வாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து 26.09.2014 அன்று சென்னை ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்
செவ்வாய், 9 செப்டம்பர், 2014
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தென்மண்டல நிர்வாகிகள் கூட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்கள் தலைமையில் மதுரையில் இன்று 09.09.2014 நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்கள் அளித்த பேட்டி:
தமிழக வாழ்வுரிமைக் கட்சியானது தமிழக மக்களின் பிரச்சினைகள் மற்றும் உலக மக்களின் துயர்துடைக்க தொடர்ந்து குரல் கொடுக்கிறது. இதற்காக தமிழ் உணர்வுள்ள அமைப்புகளை ஒருங்கிணைத்து போராடி வருகிறோம். ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சே வருகிற 26–ந்தேதி ஐ.நா. சபையில் பேச உள்ளார். இதனை அனுமதிக்கக் கூடாது. ஒரு போர் குற்றவாளியை ஐ.நா. சபையில் பேச அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது. இதை தடுக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.
ராஜபக்சே பேசுவதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தமிழ் உணர்வாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து 26–ந்தேதி சென்னை ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான அகதிகளிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஈழத்தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசை விட பா.ஜனதா அரசு பல மடங்கு துரோகம் செய்து வருகிறது. குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை போன்றவற்றை தீர்ப்போம், கச்சத்தீவை மீட்போம் என கூறிய பா.ஜனதா இவற்றில் எதையும் தீர்க்கவில்லை. இதற்கு மாறாக அதிகப் படியாகவே அந்த பிரச்சினை நடக்கின்றன. இந்த பிரச்சினையை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். முல்லை பெரியாறு, காவிர மேலாண்மை வாரியம் போன்றவற்றின் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டிருக்கிறார். அதற்காக அவரை பாராட்டுகிறோம்.
பேட்டியின்போது பொதுச்செயலாளர் காவேரி, தென்மண்டல செயலாளர் தமிழ்நேசன், மதுரை மாவட்ட தலைவர் பீர்முகமது ஆகியோர் உடன் இருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக