தமிழ் இனப் படுகொலையின் 5 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு
திங்கள், 19 மே, 2014
தமிழ் இனப் படுகொலையின் 5 ம் ஆண்டு
நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகில் மே–17
இயக்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல்
நிகழ்வு நேற்று 18.05.2014 மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வினை மே 17 இயக்கம் ஒழுங்கு செய்திருந்தது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, கோவை ராமகிருஷ்ணன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொது செயலாளர் வை.காவேரி, அமைப்பு செயலாளர் கொற்றவ மூர்த்தி, ஓவியர் வீரசந்தம் , பொழிலன் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் உணர்வுடன் கலந்துகொண்டனர்.
‘‘தமிழீனத்தின் விடுதலையை வென்றெடுப்போம், ‘‘தமிழீழம் மலரும் வரை ஓயமாட்டோம்’’ என்ற முழக்கத்துடன் இந்த ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழீழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை உலகம் அறிவிக்க வேண்டும். தமிழினத்தை சிறுபான்மையினர் என்று கூறிவரும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், தமிழினம் தேசிய இனம் என்பதை வலியுறுத்தி உறுதி மொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக