நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் 26.05.2014 அன்று சென்னையில் போராட்டம்
வெள்ளி, 23 மே, 2014
தமிழக
வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன்
செய்தியாளர்களுக்கு 22.05.2014 அன்று சென்னையில் அளித்த பேட்டி:
இந்திய பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ளார். ராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து தமிழர் அமைப்புகள் தொடர்ந்து போராடுகிறோம். ராஜபக்சே டெல்லி வருவதை கண்டித்து சென்னையில் 26.05.2014 அன்று தமிழர் அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்துகிறோம். ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்ற ராஜபக்சேவை நரேந்திர மோடி அழைத்தது கண்டிக்கத்தக்கது. அவர் ஒரு போர் குற்றவாளி. இதற்காக எதிர்காலத்தில் பாரதிய ஜனதா நிச்சயம் வருந்தும். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வழியில் மோடியும் செல்வதை எதிர்க்கிறோம்.தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன் ராதாகிருஷ்ணனும் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. அவரது கருத்து, தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக உள்ளது. தேர்தலுக்கு முன் கூறிய நிலைப்பாட்டில் இருந்து பாஜக மாறி உள்ளது கண்டிக்கத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக