நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர். கே.கோபாலை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பிரசாரம்

புதன், 9 ஏப்ரல், 2014


நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர். கே.கோபால் அவர்களை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் நாகை மாவட்டம், கீழ்வேளூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

இந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர். ஜீவானந்தம் தலைமை வகித்தார். தமிழக அரசின் முன்னாள் புதுதில்லி சிறப்புப் பிரதிநிதி அ. அசோகன், குடிசை மாற்று வாரியத் தலைவர் தங்கமுத்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கொற்றவமூர்த்தி, நாகை தொகுதி அ.தி.மு.க செயலாளர் ஆசைமணி மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட போது, இலங்கை அரசுக்கு உறுதுணையாக இருந்தது மத்திய காங்கிரஸ் அரசு. இதற்கு காங்கிரஸ் கட்சிக்குத் துணையாக நின்றது தி.மு.க. இந்த இரண்டு கட்சிகளும் இலங்கைத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை தமிழர்கள் மறக்கமாட்டார்கள்.

பா.ம.க.வுக்குக் கொள்கை, லட்சியம் ஏதும் கிடையாது. வைகோவும் தனது கொள்கைகளில் உறுதி இல்லாதவராகவே உள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது மனைவி, மைத்துனர் நலனில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இதனால், அவரது கட்சியிலிருந்த பலர் அதிமுகவைத் தேடி வந்து கொண்டுள்ளனர். இதன்மூலம், கொள்கை இல்லாதவர்களின் கூட்டணியாக உள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி.

தே.மு.தி.க.வுக்கும், பா.மக.வுக்கும் அரசியல் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர் ஜெயலலிதாதான். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, இலங்கைத் தமிழர்களின் நலனில் உள்ள அக்கரையைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. தமிழர்களுக்கு துரோகம் இழைத்த கட்சிகளையும், கொள்கை இல்லாத கட்சிகளையும் புறக்கணித்து, பொதுமக்கள் அனைவரும் அ.தி.மு.க.வுக்கு அமோக அதரவளித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP