தமிழகத்தில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெறாது - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேட்டி
செவ்வாய், 8 ஏப்ரல், 2014
தமிழக
வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள்
திருவாரூரில் 07.04.2014 (திங்கள்கிழமை) அளித்த பேட்டி:
தமிழகத்தில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெறாது. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சுயநலத்துக்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். தமிழீழத்தை ஆதரிக்காத பா.ஜ.க.வுடன் வைகோ கூட்டணி சேர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மக்களின் எந்த உரிமைக்காகவும் போராடாத விஜயகாந்துக்கு தமிழக மக்களிடம் வாக்கு கேட்கும் உரிமை இல்லை. சமுதாயத்தை முன்னிறுத்தி தமிழ் இனத்துக்கு துரோகம் இழைத்த பா.ம.கவுடன் இணையும் வாய்ப்பு இல்லை.
தமிழக மக்கள் மட்டுமன்றி, இலங்கைத் தமிழர்களின் கனவு நிறைவேறவும், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாற்றில் தமிழகத்துக்கான உரிமையை சட்டப் போராட்டம் மூலம் நிலைநாட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பிரதமராக வேண்டும். ஜெயலலிதா அவர்களின் கரத்தை வலுப்படுத்த தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வெற்றிப் பெற தமிழக வாழ்வுரிமைக் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
பேட்டியின்போது, கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கொற்றவமூர்த்தி, மாநில துணைப் பொதுச் செயலர் தஞ்சை தமிழ்நேசன், திருவாரூர் மாவட்டச் செயலர் முத்துராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக