கடலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் அவர்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிமுகப்படுத்தினார்
வியாழன், 6 மார்ச், 2014
கடலூர்
பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் அவர்கள் தமிழக
வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி
நிர்வாகிகளை 05.03.2014 (புதன்கிழமை) அன்று மாலை சந்தித்து ஆதரவு கோரினார்.
இதில் கடலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன்
அவர்களை அறிமுகப்படுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர்
பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பேசியது:
தமிழினத் தலைவர், தமிழின போராளி என்று கூறிக்கொண்டு பதவி சுகங்களை அனுபவித்தவர்கள், தமிழர்களுக்கு
எந்த நன்மையும் செய்யவில்லை. தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டர்
தமிழக முதல்வர் ஜெயலலிதா. அதனால் தான் அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளோம். வட
மாவட்டங்களில் ஜாதி பெயரை சொல்லி அரசியல் செய்துகொண்டு, மோதல்களை
ஏற்படுத்தி ஓட்டு வாங்க நினைப்பவர்கள், முதல்வர் ஜெயலலிதா வன்னியர்களுக்கு
எதிரானவர் என்று பிரசாரம் செய்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா
வன்னியர்களுக்கு எதிரானவர் இல்லை என்பதை, மக்களவை தேர்தல் முடிவு மூலம்
தெரியவரும். அப்போது ஜாதி அரசியல் செய்பவர்களின் பிரசாரம் பொய் என்பதை
வன்னியர் சமுதாய மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
வரும் பாராளுமன்ற
தேர்தலில் கடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் 3 லட்சம் வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். அதற்கு எந்தவித தியாகத்துக்கும் தமிழக
வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்கள் தயாரக வேண்டும். தமிழகத்தில் உள்ள பாட்டாளி
மக்கள் கட்சி உள்பட பெரும்பாலான கட்சிகளை சட்டமன்றம்,
நாடாளுமன்றத்துக்குள் அனுப்பியது அதிமுக தான். அந்த வரிசையில் 2016 ஆம்
ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சட்டமன்றம் செல்லும்
என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
இதில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியது:
கூட்டணி கட்சியினர் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் வெற்றிக்கு
கடுமையாக உழைக்க வேண்டும். முதல்வரை நம்பியவர்களுக்கு வளர்ச்சி மட்டுமே
இருக்கும். அந்த அடிப்படையில் இந்த தேர்தலில் தேர்தல் பணியாற்றும்போது என்ன
பிரச்னை ஏற்பட்டாலும் என்னிடம் முறையிடலாம் என்றார்.
கடலூர் மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் பேசியது:
இந்த தேர்தலில் முதல்வருக்கு எதிரி யாரும் இல்லை. அவரால் வேட்பாளராக
தேர்வுசெய்யப்பட்ட நான் கூட்டணி கட்சியினரின் அன்பையும், பொதுமக்களிடம்
நன்மதிப்பையும் பெற உழைப்பேன். இதனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்,
முதல்வர் அறிவித்த என்னை, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய
வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக