என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளி ராஜா என்ற ராஜ்குமாரை மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம் - இழப்பீட்டு தொகையாக 25 லட்சம் வழங்க கோரிக்கை
செவ்வாய், 18 மார்ச், 2014
நெய்வேலி ஒன்றாம் சுரங்க விரிவாக்கத்தில் பணியாற்றும் ஒப்பந்தத்
தொழிலாளி, ராஜா என்ற ராஜ்குமார் (35). இவர், திங்கள்கிழமை நண்பகல் 12.30
மணியளவில், இரண்டாம் சுரங்கத்தில் பணியாற்றும் தன் நண்பரை பார்க்கச்
சென்றுள்ளார். அவரை சுரங்க நுழைவாயிலில் தடுத்து நிறுத்திய மத்திய தொழிலகப்
பாதுகாப்புப் படை வீரர் உள்ளேவிட மறுத்தார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாதுகாப்புப் படை வீரர் தனது
துப்பாக்கியை எடுத்து ராஜ்குமாரின் தலையில் மிக அருகில் மூன்று முறை
சுட்டதாகத் தெரிகிறது. இதில் ராஜ்குமாரின் மூளைச் சிதறி, அந்த இடத்தில்
கீழே விழுந்து இறந்தார்.
ராஜ்குமாரை துப்பாக்கியால் சுட்ட மத்திய தொழிலக
பாதுகாப்பு படை வீரரை கொலை வழக்கில் கைது செய்ய கோரியும், ராஜாவின்
குடும்பத்திற்கு மத்திய அரசு நிரந்தர வேலை வழங்கவும், இழப்பீட்டு தொகையாக
25 லட்சம் வழங்கவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை நிறுவனத் தலைவர்
பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை நிறுவனத் தலைவர்
பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
0 கருத்துகள்:
கருத்துரையிடுக